Signs Of Liver Disease: கல்லீரல் நோயின் 5 அறிகுறிகளை உணர்ந்தால் உயிர் தப்பலாம்!
- நம் உடம்பில் ஏதாவது தொற்று அல்லது நோய் ஏற்பட்டால் அதிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் கல்லீரலுக்கு மட்டுமே உண்டு. ஆனால் கல்லீரல் கெடுவதை காட்டும் அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அப்புறம் உயிரைக் காப்பாற்றுவது ஆண்டவன் விட்ட வழியாகிவிடும்.
- நம் உடம்பில் ஏதாவது தொற்று அல்லது நோய் ஏற்பட்டால் அதிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் கல்லீரலுக்கு மட்டுமே உண்டு. ஆனால் கல்லீரல் கெடுவதை காட்டும் அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அப்புறம் உயிரைக் காப்பாற்றுவது ஆண்டவன் விட்ட வழியாகிவிடும்.
(1 / 7)
சரியான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றாவிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். சோம்பேறித்தனம், உடற்பயிற்சி செய்யாமலிருத்தல், அளவுமீறிய குடிபழக்கம், ஃபாஸ்ட்புட் கலாசாரம் ஆகியவை இதில் முக்கிய காரணிகளாகும். பாதிப்பு ஏற்பட்டால் கல்லீரலில் உள்ள நல்ல செல்களை அழித்து அதில் கொழுப்பு குடியேறும். பின்னர் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் நோய்களை உண்டாக்கிவிடும். அதற்கு முன்பாக கல்லீரல் சீரழிவதைக் காட்டும் இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகிவிடுங்கள்.
(2 / 7)
கொழுப்பு நிறைந்த கல்லீரல் பாதிப்பு ஸ்டீடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படும் பிரச்னையாகும். கொழுப்பு உங்கள் கல்லீரலின் எடையில் 5% முதல் 10% வரை இருக்கும் போது அது ஆபத்தானது. கொழுப்பு கல்லீரல் நான்கு நிலைகள் உள்ளன. இவை பொதுவான கொழுப்பு கல்லீரல், ஸ்டீடோஹெபடைடிஸ், ஃபைப்ரோஸிஸ் மற்றும் சிரோசிஸ்.
(3 / 7)
இந்நோய் தொடர்ந்தால் மஞ்சள் காமாலை வரலாம். கல்லீரல் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கண்கள், தோலின் கீழ் பிலிரூபின் அதிகப்படியான சேர்தல் ஆகியவற்றால் இந்த மஞ்சள்காமாலை நோய் ஏற்படுகிறது. நாட்டுமருந்துகள் தான் மஞ்சள்காமாலைக்கு சரியான நிவாரணி. இருப்பினும் கொஞ்சம் அசந்தால் பிலிரூபின் அளவு எகிறி மரணத்தை விளைவித்துவிடும் என்பதால் தொடக்கத்திலேயே சிகிச்சை எடுக்க வேண்டும்.
(4 / 7)
நீங்கள் அதிகமாக மதுபானம் குடிப்பவராகவும், வயிற்று உப்புசம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளில் ஒன்றான ஆஸ்சைட்டாக இருக்கலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் ஆகிவிடும். ஹெபாடிடிஸ் வைரஸ் சி அல்லது பி பாதிப்பை ஏற்படுத்தும்.
(5 / 7)
கொழுப்பு கல்லீரல் தாங்கமுடியாத வயிற்று வலியை ஏற்படுத்தும். வயிற்றுத் தசைப்பிடிப்புகள் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும். வலி பொதுவாக அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் ஏற்படுகிறது.
(6 / 7)
மூக்கிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும். சிலருக்கு வெயில்காலங்களில் இதுபோன்று மூக்கிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். ஆனால் அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தால் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். கல்லீரல் பாதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
(7 / 7)
கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு பொதுவாக நோயின் இறுதி நிலை வரை அறிகுறிகள் இருக்காது. இரண்டு முக்கிய அறிகுறிகள் என்றால் எடை இழப்பும், பசியின்மையும் ஆகும். வயிறு எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் சோர்வாகிவிடுவீர்கள்.
மற்ற கேலரிக்கள்