Magh Bihu: அறுவடைத் திருநாளில் அஸ்ஸாமில் செய்யும் அருமையான படையல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magh Bihu: அறுவடைத் திருநாளில் அஸ்ஸாமில் செய்யும் அருமையான படையல்

Magh Bihu: அறுவடைத் திருநாளில் அஸ்ஸாமில் செய்யும் அருமையான படையல்

Jan 07, 2023 09:43 PM IST I Jayachandran
Jan 07, 2023 09:43 PM , IST

  • அறுவடைத் திருநாளை தமிழர்கள் பொங்கல், மாட்டுப்பொங்கல் எனக் கொண்டாடுகின்றனர். அதேபோல் வடநாட்டில் அதை சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமில் இதை மகா பிஹு என்ற போகலி பிஹு எனக் கொண்டாடுகின்றனர். நாம் சர்க்கரைப் பொங்கல் படைப்பது போல் அஸ்ஸாமியர்கள் 5 வகையான கொழுக்கட்டைகளை செய்து வழிபடுகின்றனர். 

பொங்கலன்று நாம் சர்க்கரைப் பொங்கல் படைப்பது போல் அஸ்ஸாமியர்கள் 5 வகையான கொழுக்கட்டைகளை செய்து வழிபடுகின்றனர். இந்தக் கொழுக்கட்டைகளை அவர்கள் பித்தா என்றழைக்கின்றனர். நம்ம ஊர் மடக்குக் கொழுக்கட்டைகள் போல கிட்டத்தட்ட இருக்கின்றன.

(1 / 6)

எள்ளு பித்தா: இந்த பித்தாவை கருப்பு எள், வெல்லம், அரிசி மாவைக் கொண்டு செய்கின்றனர். பித்தாவை வேகவைத்து சமைக்கின்றனர்.

(2 / 6)

தேங்காய் பித்தா: இந்த பித்தாவை எள்ளுக்குப் பதிலாக தேங்காய்ப் பூரணத்தை வைத்து செய்கின்றனர். சாதாரண அரிசி மாவில் வெல்லம் கலந்த தேங்காய் பூரணத்தை வைத்து அவித்து எடுக்கின்றனர். அதேபோல் போரா என்ற அரிசி மாவிலும் பிரவுன் நிறத்தில் செய்கின்றனர்.

(3 / 6)

கிலா பித்தா: போரா எனப்படும் அரிசி அல்லது பிற வகை அரிசி மாவை வைத்து கிலா பித்தாவை தயாரிக்கின்றனர். வெல்லம், அரிசி மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து எண்ணெய்யில் அப்பம் போல பொரித்து எடுக்கின்றனர்.

(4 / 6)

தேகெலி அல்லது கேட்லி பித்தா: அரிசி மாவில் குங்குமப்பூ, ஏலம் சேர்த்து மணமிக்க தேகெலி அல்லது கேட்லி எனப்படும் பித்தாவை செய்கின்றனர். அரிசி மாவைப் பிணைந்து அதில் தேங்காய்த்துருவலுடன் வெல்லம் சேர்த்து இட்லிச் சட்டியில் வேகவைத்து தயாரிக்கின்றனர். பாரம்பரிய மிக்க அஸ்ஸாம் தேநீருடன் இந்தப் பித்தாவை சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

(5 / 6)

ஹுட்லி பித்தா: ஹுட்லி பித்தா, சுட்டுலி பித்தா க்ஸுட்டுலி பித்தா என்ற அழைக்கப்படும் இந்த வகையை கருப்பு எள், வெல்லம் சேர்த்து வறுத்து சமைக்கின்றனர். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்