5 Weight Loss Chutneys: உடல் எடையைக் குறைக்க உதவும் 5 சட்னி வகைகள்!
சட்னி, துணை உணவாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் உணவில் எடை இழப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில், உங்கள் உடற்பயிற்சியும் உங்கள் உணவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் சீரான உணவை எடுத்துக்கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
சட்னி பொதுவாக நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறது. ஏனெனில் இது பழங்கள், காய்கறிகள் அல்லது கீரைகளால் ஆனது. இது நம் உடலின் முழு உணர்வுகளை மேம்படுத்த உதவும்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் அபிலாஷா, எடை இழப்புப் பயணத்தை ஆதரிக்க உதவும் சட்னிகள் குறித்து பரிந்துரைக்கிறார்.
1. கொத்தமல்லி புதினா சட்னி
தேவையான பொருட்கள்: புதிய கொத்தமல்லி (1 கப்), புதிய புதினா இலைகள் (1/2 கப்), பச்சை மிளகாய் (2-3, சுவைக்கு ஏற்ப), புளி - (2 தேக்கரண்டி), உப்பு (சுவைக்கு), உளுந்தம்பருப்பு - சிறிதளவு, வெள்ளைப்பூண்டுப் பல் - 3, தேங்காய் நறுக்கியது(அரை முடி)
வழிமுறைகள்:வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பினை சிவக்க வறுக்கவும். அதன்மேல், 2 பச்சை மிளகாய், பூண்டு பல், புதினா மல்லித் தழைகள், துருவிய தேங்காய் போட்டு வதக்கவும். ஆறிய பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் சுவையான புதினா மல்லி சட்னி தயார்.
தயாரிப்பு நேரம்: 10 நிமிடங்கள்
2. தக்காளி பூண்டு சட்னி
தேவையானவை: பழுத்த தக்காளி - 2 (நடுத்தர அளவு), பூண்டு பற்கள் - 4 முதல் 5, புளிக்கரைசல், உப்பு - தேவையான அளவு
செய்முறை: நறுக்கிய தக்காளி மற்றும் பூண்டை ஒரு நான்-ஸ்டிக் கடாயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதை குளிர்வித்து பின்னர் புளிக்கரைசல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தயாரிப்பு நேரம்: 15 நிமிடங்கள்
3. தேங்காய் கறிவேப்பிலை சட்னி
தேவையானவை: தேங்காய் நறுக்கியது - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு வாணலியில் தேங்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் போட்டு, எண்ணெயை ஊற்றி லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதை குளிர்வித்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீர், பெருங்காயம், மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
தயாரிப்பு நேரம்: 15 நிமிடங்கள்
4. ஆப்பிள் இலவங்கப்பட்டை சட்னி
தேவையான பொருட்கள்: ஆப்பிள்கள் (2 நடுத்தர அளவு), இலவங்கப்பட்டை தூள் (1 தேக்கரண்டி), சாதிக்காய் (ஒரு சிட்டிகை), எலுமிச்சை சாறு (1 தேக்கரண்டி), உப்பு (சுவைக்கு).
வழிமுறைகள்: துண்டுகளாக்கப்பட்ட ஆப்பிள்களை கடாயில் போட்டு, மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் இலவங்கப்பட்டை தூள், சாதிக்காய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றினைப் போட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தயாரிப்பு நேரம்: 20 நிமிடங்கள்
5. வறுத்த மிளகு சட்னி
தேவையானவை: குடை மிளகாய் (2-3, எந்த நிறத்திலும்), பூண்டு பற்கள் (2-3), பால்சாமிக் வினிகர் (1 டேபிள்ஸ்பூன்), உப்பு (சுவைக்கேற்ப), கருப்பு மிளகு (சுவைக்கேற்ப).
வழிமுறைகள்: குடைமிளகாயைத் திறந்த தீயில் கருகும் வரை வறுக்கவும். தோலை உரித்து விதைகளை நீக்கவும். அவற்றை வறுத்த மிளகுத்தூள், பூண்டு, வினிகர், உப்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தயாரிப்பு நேரம்: 25 நிமிடங்கள்
இந்த சட்னிகளை நேரத்திற்கு முன்பே தயாரித்து ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்