தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Interior Design: வீட்டில் அமைதியை உருவாக்க இன்டீரியர் டிசைனில் பயன்படும் 5 குறிப்புகள்

Interior Design: வீட்டில் அமைதியை உருவாக்க இன்டீரியர் டிசைனில் பயன்படும் 5 குறிப்புகள்

Marimuthu M HT Tamil
Jan 19, 2024 01:12 PM IST

வீட்டில் இண்டீரியர் டிசைனை உருவாக்க உதவும் 5 குறிப்புகள் குறித்துப் பார்ப்போம்.

அழகியலை சமநிலைப்படுத்துவது முதல் ஒரே மாதிரியான சூழ்நிலையை உருவாக்குவது வரை, உங்கள் வாழ்வியல் இடங்களை நிம்மதி தரும் இடங்களாக மாற்றுங்கள்.
அழகியலை சமநிலைப்படுத்துவது முதல் ஒரே மாதிரியான சூழ்நிலையை உருவாக்குவது வரை, உங்கள் வாழ்வியல் இடங்களை நிம்மதி தரும் இடங்களாக மாற்றுங்கள். (Unsplash)

வீட்டின் அமைதி என்பது அது அமைந்திருக்கும் விதத்தைப் பொறுத்தும் தீர்மானிக்கப்படுகிறது. இவை இன்றைய காலத்தில் கட்டுமானத்தின்போதும் பலராலும் விரும்பப்படுகிறது. எனவே, கட்டுமானத்தை முடித்தப் பலரும் இண்டீரியர் டிசைனுக்காக மெனக்கெடுகின்றனர்.  பார்வைக்கு மகிழ்ச்சியளிக்கும் இடங்களை வடிவமைக்க கட்டடங்களில் இன்டீரியர் டிசைன் செய்வது முக்கியம் ஆகிறது.

உங்கள் வீட்டில் உட்புறங்களை அழகாக்குவதில் ஃபால்ஸ் சீலிங், சோஃபிட் சீலிங் மற்றும் பிற இன்டீரியர் வடிவமைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்கள் வீட்டின் பல பகுதிகளில், இன்டீரியர் டிசைன் செய்யும்போது, உங்கள் முழு வீடும் அமைதியைத் தர தயார் ஆகிறது. 

இன்டீரியர் டிசைன் குறித்த 5 உதவிக்குறிப்புகளை, வோக்ஸ் இந்தியாவின் நிறுவனர் வருண் பொத்தார், பகிர்ந்துள்ளார். 

1.ஒரு தெளிவான தீமில் டிசைன் செய்யுங்கள்:

ஒரு வீட்டிற்குள் இன்டீரியர் டிசைன் செய்வது என்பது, ஒரே தீமில் இருக்கவேண்டும். அழகுப் படுத்தல் என்றால் அழகிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தல்; காற்றோட்டம் வெளிச்சத்துடன் அழகுப்படுத்தல் என்றால் அவ்வாறே செய்வது; இப்படி ஒரு தீமில் இன்டீரியர் டிசைன் செய்யவேண்டும். அதேபோல் அனைத்து தீமும் அழகியல் ரீதியாக மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் வகையில், இருக்கவேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

2. தனித்துவமாக இருக்கட்டும்: 

திரைச்சீலைகள், நாற்காலிகள் மற்றும் ஃபால்ஸ் சீலிங் போன்றவற்றில் ஒரே மாதிரியான வண்ணத்தையோ அல்லது ஒத்த பிற வண்ணங்களையோ சேர்க்கலாம்.  இது ஒரு வலுவான அழகான அடித்தளத்தை வழங்குகிறது. இதன் மீது இரண்டாம் நிலை வண்ணங்கள், டிசைன்களை அப்ளை செய்யலாம். 

3. மாறுபட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துங்கள்

வண்ணங்கள், இன்டீரியர் டிசைன்களில் மாறுபட்ட அம்சங்களை சுவர் மற்றும் ஃபர்னிச்சர்களில் அறிமுகப்படுத்துங்கள். மாறுபட்ட கலரை சுவர்களில் பயன்படுத்துவதாக இருந்தாலும், அது கண்களை துருத்தாத வகையிலோ, அடிக்கும் வகையிலான கலரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

4.  நிலைத்தன்மையை வலுப்படுத்துதல்

வீட்டின் உட்புற அலங்காரத்தில் ஷோபா செட்கள், ஃபால்ஸ் சீலிங்குகள் மற்றும் SPC தரை அமைப்பு ஆகியவை கண்களுக்கு குளிர்ச்சித் தருபவையாக, அழகான லுக்குடன் இருக்கவேண்டும்.  இது இணக்கமான சூழலை உருவாக்கி மனிதரின் மகிழ்ச்சியை உண்டு செய்கிறது. 

5. அனைத்தையும் ஒன்றாகக் கருதுங்கள்:

வீட்டில் இண்டீரியர் டிசைனில் திட்டமிடும்போது, நாம் தேர்ந்தெடுக்கும் விளக்குகள், ஷோஃபா போன்றவற்றை வாங்கும்போதும் அழகியல் பார்வையை முன்னணியில் வையுங்கள். 

ஃபால்ஸ் சீலிங்குகள், சோஃபிட் சீலிங்குகள் மற்றும் பிற வடிவமைப்பு கூறுகளை இணைக்க இந்த ஐந்து படிகளைப் பின்பற்றுவதன் மூலம், இணக்கமான, சீரான மற்றும் பார்வைக்கு உரிய இண்டீரியர் டிசைனை உண்டு செய்யலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9