Kids Health: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் 5 ஆரோக்கியமான உணவுகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Health: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் 5 ஆரோக்கியமான உணவுகள்

Kids Health: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் 5 ஆரோக்கியமான உணவுகள்

I Jayachandran HT Tamil
Feb 17, 2023 04:09 PM IST

குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் 5 ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கு நாம் அறிந்து கொள்வோம்.

குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் ஆரோக்கியமான உணவுகள்
குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் ஆரோக்கியமான உணவுகள்

குழந்தைகள் விரைவாக வளரும் அதே வேளையில், அவர்கள் வளரும் ஆண்டுகளில், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கவும் அவர்களுக்கு நிறைய ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. குழந்தைகள் உண்ணும் தின்பண்டங்களிலிருந்து அவர்களின் உகந்த ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆற்றலைப் பெறுவதை உறுதிசெய்ய, நாம் அவர்களின் உணவு முறைகளைக் கவனித்து, மாற்று சிற்றுண்டி விருப்பங்களைப் பார்க்க வேண்டும்.

நன்கு வேகவைத்த முட்டை மற்றும் சீஸ் க்யூப்ஸ்

அபோட்ஸ் ஊட்டச்சத்து மருத்துவம் மற்றும் அறிவியல் விவகாரங்களின் இயக்குநர் டாக்டர் கணேஷ் காதே கூறுகையில், “வாரத்தின் தொடக்கத்தில் நன்கு வேகவைத்த முட்டைகளை சமைத்து தருவதன் மூலம் உங்கள் குழந்தைகளின் சிற்றுண்டி சிறப்பாக அமைய உங்களை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். பெரிய முட்டைகளில் 6 கிராம் புரதம் உள்ளது. சீஸ் க்யூப்ஸுடன் அவித்த முட்டைகள் சரியான காம்பினேஷனாக இருக்கும். அவை குழந்தைகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 5 முதல் 7 கிராம் புரதம் மற்றும் 80 கலோரிகள் மட்டுமே உள்ளதால், சீஸ் க்யூப்ஸ் ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்,. இத்துடன் ஃப்ரஷ் காய்கறிகளுடன் சேர்ந்து தரலாம்.

வீட்டிலேயே, ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் போது, ​​ரெடிமேட் சிற்றுண்டி கலவைகளுக்கு ஏன் தேவையில்லாமல் பணம் செலவழிக்க வேண்டும்? சுவையுடன் கூடிய ஒரு சிறிய சிற்றுண்டிக்கு, உப்பு சேர்க்காத பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் இனிக்காத உலர்ந்த பழங்கள், இனிப்பு சேர்க்காத தேங்காய் துருவல்கள், திராட்சைகள், பேரீச்சம்பழங்கள் மற்றும் கொட்டைகள் போன்றவற்றை தரலாம்.

அரிசி அவலில் தயாரிக்கப்படும் மசாலா போஹா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவலில் செய்யப்படும் இதை நறுக்கிய வெங்காயம், மசாலா, மூலிகைகள், எலுமிச்சை சாறு மற்றும் வேர்க்கடலை சேர்த்து சமைக்கலாம். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும், எலுமிச்சை உணவாகும். சில மொறுமொறுப்பான சேவு, புதிதாக வெட்டப்பட்ட வெங்காயம் அல்லது துருவிய தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகளுக்கு தந்தால் இது மிகவும் சுவையாக இருக்கும். இதுவும் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த டிபன் ஸ்நாக்ஸ்.

பான்கேக்குகள் உங்கள் குழந்தைகளுக்கு செய்ய எளிதான மற்றும் வேடிக்கையான சிற்றுண்டியாகும். அதில் சில சாக்லேட் சுவையுள்ள பொடிகளைச் சேர்ப்பது சுவையை உயர்த்தும் மற்றும் சிற்றுண்டியின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும். இது 37 ஊட்டச்சத்துக்கள் கொண்ட முழுமையான மற்றும் சீரான ஊட்டச்சத்து உணவாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். 90 நாட்களில் குழந்தைகளிடம் தெரியும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவியல் பூர்வமாக சோதிக்கப்பட்டது.

“கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் இருப்பதால், டோக்ளாவை மாலை நேர ஸ்நாக்ஸாகச் சிறப்பாகச் செய்கிறார்கள். கடலை மாவை தட்டையான பாத்திரத்தில் வேகவைத்து, இனிப்பு சட்னியுடன் தந்தால் சுவையாக இருக்கும். ஓட்ஸுடன் டோக்ளாவைத் தயாரிப்பது இந்த உணவுக்குக் கூடுதல் ஆற்றலையும் புரதத்தையும் சேர்க்கும்,” என்று டாக்டர் காதே அறிவுறுத்துகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.