Stomach Pain And Burning Sensation: சீரற்ற வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சலுக்குப் பின் இருக்கும் காரணங்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stomach Pain And Burning Sensation: சீரற்ற வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சலுக்குப் பின் இருக்கும் காரணங்கள்

Stomach Pain And Burning Sensation: சீரற்ற வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சலுக்குப் பின் இருக்கும் காரணங்கள்

Marimuthu M HT Tamil Published Mar 29, 2024 04:49 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 29, 2024 04:49 PM IST

Stomach Pain And Burning Sensation: வயிற்று வலி மிகவும் பொதுவானது. ஆனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பிறகும் அவை தொடர்ந்தால், இந்த 4 காரணங்கள் அதன் பின்னால் இருக்கலாம்.

நிலையான வயிற்று வலி மற்றும் எரியும் உணர்வுக்கு 4 காரணங்கள்
நிலையான வயிற்று வலி மற்றும் எரியும் உணர்வுக்கு 4 காரணங்கள் (Pixabay)

"மாறிவரும் பருவம் மற்றும் வெப்பநிலை திடீரென அதிகரிப்பதால் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். நீரிழப்பினால் ரத்தக் குழாய்கள் சுருங்கி அழுத்தம் மற்றும் வலியை உருவாக்குவதால், வயிறு சுருங்கலாம். இந்த நேரத்தில் இது ஒரு பொதுவான பிரச்னையாக இருந்தாலும், நிலையான வலி மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற மற்ற காரணங்களுக்காகவும் ஏற்படலாம் என்பதை புரிந்துகொள்வது அவசியம் "என்று காரடி-புனேவின் மணிப்பால் மருத்துவமனைகளின் காஸ்ட்ரோஎன்டாலஜி இணை மருத்துவர் கோத்தாரி கூறுகிறார்.

வயிற்று வலிக்கான சில பொதுவான காரணங்கள்:

1. வயிற்றுப் புண்:

உணவுக்குழாயின் உட்சுவரில் திறந்த புண்கள், அடிவயிற்றுப் பகுதியில் எரிச்சல் உணர்வையும் தொடர்ச்சியான வலியையும் ஏற்படுத்துகின்றன. இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது. வளர்ந்த புண்களால், உட்புற ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த சிகிச்சைக்கு எண்டோஸ்கோப்பி தேவைப்படலாம்.

2. எதுக்களித்தல்:

பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக இருக்கலாம். ஆனால், ஒரு நபர் எதுக்களித்தல் பிரச்னையை அனுபவவித்தால், அதை பல நாட்கள் அனுபவித்தால், அது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GastroEsophageal Reflux Disease - ஜி.இ.ஆர்.டி) எனப்படும் கடுமையான பிரச்னையாக இருக்கலாம்.

GERD சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உணவுக்குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் இரத்தக்குழாயில் வடு ஏற்படும். ஜி.இ.ஆர்.டிக்கு சிகிச்சையளிக்க, சில உணவு மாற்றங்கள், மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் எண்டோலுமினல் சிகிச்சை உள்ளிட்டப் பல்வேறு அணுகுமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

3. இரைப்பை அழற்சி:

நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் குமட்டல் ஆகியவற்றுடன் வயிற்றில் எரியும் உணர்வு இருந்தால், அது இரைப்பை அழற்சியின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இது ஒரு லேசான நிலையாகும். இது ஓய்வு மற்றும் சிகிச்சையுடன் விரைவாக மேம்படும்.

4. உணவுகளுக்கு எதிர்வினை:

காரமான உணவுகள், ஆல்கஹால் மற்றும் பால் பொருட்கள் போன்ற சில உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். உண்ணும் உணவு சுகாதாரமற்ற நிலைமைகளின் கீழ் தயாரிக்கப்பட்டாலும், வயிற்று வலிக்கு வழிவகுத்தாலும் இது நிகழலாம்.

வயிற்று வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது ஏன் முக்கியம்?

"வயிற்று வலிக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். அதைப் புறக்கணிப்பது அறிகுறிகளை மோசமாக்கும் மற்றும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, வயிற்று வலியைத் தூண்டக்கூடிய பல்வேறு காரணங்களைப் பற்றி விழிப்புடன் இருப்பதும் அவற்றைச் சமாளிக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம். எந்தவொரு காரணத்திற்காகவும் நீண்டகால வயிற்று வலி உடலின் மற்ற பகுதிகளை பாதிக்கும்.  வயிற்று புண்கள், வீக்கம் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தூண்டும்" என்று டாக்டர் கோத்தாரி கூறுகிறார்.

எனவே, அதைப் புரிந்துகொண்டு உடனடியாக சிகிச்சைப் பெறுவது முக்கியம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.