Thyroid: தைராய்டு நோயாளிகளுக்கு 4 ஆரோக்கியமான நறுக் முறுக் டிஃபன்கள்!
தைராய்டு சுரப்பி செயலிழப்பு பல்வேறு தைராய்டு பிரச்னைகளை உண்டாக்குகின்றன. அதன் அறிகுறிகளை நிர்வகிக்க சில உணவுகளில் சில நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த பட்டியல்
தைராய்டு நோயை நிர்வகிப்பதில் ஊட்டச்சத்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தைராய்டு சுரப்பி என்பது, மனித உடலில் கழுத்தின் முன்புறத்தில் உள்ள சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இது உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை ஆதரிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் சில சமயங்களில், இந்தச் சுரப்பி செயலிழந்து அதிகப்படியான அல்லது மிகக் குறைவான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அயோடின் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் குறைபாடு தைராய்டு செயலிழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பராமரிக்க ஒரு சீரான உணவை உட்கொள்வது முக்கியம்.
அயோடினைத் தவிர, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இக்குறைபாட்டைக் கட்டுப்படுத்த பழங்கள் மற்றும் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உலர் பழங்களில் குறிப்பாக தைராய்டு செயல்பாட்டிற்கு உதவும் செலினியம் உள்ளது. தைராய்டு அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் டிப்ஸ்களையும், அதை சரிசெய்ய உதவும் இரவு நேர சிற்றுண்டிகளையும் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா பல்வேறு தகவல்களைக் கூறுகிறார்.
4-5 ஊறவைத்த முந்திரி
முந்திரியில் செலினியம் என்ற தாது உள்ளது. இது தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. தைராய்டு அளவை ஒழுங்குபடுத்துவதிலும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக தைராய்டு திசுக்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 4-5 ஊறவைத்த முந்திரியை உண்டு வர தைராய்டு அளவு சீராகும்.
தேங்காய்த் துண்டுகள்
தேங்காயில் அதிக அளவு நடுத்தர கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரையை சீராக்குகிறது. தைராய்டு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. எனவே, இரவில் தேங்காய்த்துண்டுகளை ஒரு கடி கடிக்கலாம்.
ஒரு தேக்கரண்டி ஊறவைக்கப்பட்ட சியா விதைகள்
சியா விதைகள் சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன. இவை ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தை தரும் வளமான மூலமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை ஹஷிமோட்டோவின் தைராய்டிடிஸ், டிகுவெர்வின் தைராய்டிடிஸ் போன்ற தைராய்டு சுரப்பி தொடர்பான நிலைகளில் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. சியா விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, நீரில் ஊறவைத்து, இரவு தூங்கும் முன் சாப்பிட தைராய்டு சுரப்பி சீராகும்.
ஒரு டீஸ்பூன் வறுத்த பூசணி விதைகள்
பூசணி விதைகள் துத்தநாகச் சத்தினைத் தருகின்றன. இது தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது தைராய்டு ஹார்மோன்களை சீர் செய்ய தேவைப்படுகிறது.
மேலும், பூசணி விதைகள் தூக்கத்தை ஊக்குவிக்கும் அமினோ அமிலத்தைத் தருபவை. பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை தூக்கத்தை மேம்படுத்துகின்றன. எனவே, வறுத்த ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளை உண்டால், தைராய்டு ஆரோக்கியம் மேம்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்