தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  3 Diabetes-friendly Snacks To Satiate Sweet Cravings

Diabetes Sweets: ‘இனிப்பு சாப்பிடத் தோன்றுகிறதா?’ - நீரிழிவு நோயாளிக்கான இனிப்பான உணவுகள்

Marimuthu M HT Tamil
Jan 11, 2024 05:17 PM IST

நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு ஏற்ற இனிப்பான உணவுகள் குறித்துக் காண்போம்.

நீரிழிவு நோயாளிகள் உண்ண ஏற்ற மக்னா லவங்கப்பட்டை கீர்
நீரிழிவு நோயாளிகள் உண்ண ஏற்ற மக்னா லவங்கப்பட்டை கீர்

ட்ரெண்டிங் செய்திகள்

பேரீச்சம்பழம், அத்திப்பழம், நட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையான இனிப்புகளைக் கொடுக்கலாம். 

நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சாப்பிடக்கூடிய இனிப்புகள் குறித்து, தி மெட்ரோபாலிட்டன் உணவகம் & ஸ்பாவின் நிர்வாக சமையல்காரர் ஸ்வப்னாதீப் முகர்ஜி கூறுவனவற்றைப் பார்க்கலாம். 

மக்னா லவங்கப்பட்டை கீர்

தேவையான பொருட்கள்

மென்மையான வெள்ளை மக்னா - 100 கிராம்;

ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்;

கொழுப்பு இல்லாத பால் - 400 மில்லி;

பாதாம் பருப்பு - 10 கிராம்;

பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - 1 1/2 கப்

அத்திப்பழம் (மிகக் குறைந்த சர்க்கரை உள்ளது) - அரை டீஸ்பூன்

நசுக்கிய இலவங்கப்பட்டை -  1 டீஸ்பூன்

செய்முறை:

- மக்னாவை பாதியாக நறுக்கி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, இரண்டையும் சேர்த்து தீயில் சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும்.

- பால் மற்றும் நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு கிளறவும்.

- சுமார் 1 மணி நேரம் அல்லது பால் பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இந்த காலகட்டத்தில் அவ்வப்போது அந்தக் கலவையினை கிளறவும்.

- உங்கள் விருப்பப்படி பாதாம், அத்திப்பழங்களைச் சேர்க்கவும். நசுக்கிய இலவங்கப்பட்டை தூவி, அலங்கரித்து, குளிர்ச்சிசெய்து பரிமாறவும்.

அன்னாசி பிஸ்கட்கள்:

அன்னாசி பிஸ்கட்கள்
அன்னாசி பிஸ்கட்கள்

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 425 கிராம்

நாட்டுச் சர்க்கரை - 230 கிராம்

கோதுமை மாவு - 550 கிராம்

அன்னாசிப்பழம் (நறுக்கியது) - 100 கிராம்

செய்முறை:

-  வெண்ணெய் மற்றும் சர்க்கரையை பஞ்சுபோன்ற நிறம் வரும் வரை கலக்கவும்.

-  கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் நறுக்கிய அன்னாசிப்பழம் ஆகியவற்றைப் பிஸ்கட்டைப் போல் மடிக்கவும். 1-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 60 நிமிடங்கள் வைக்கவும்.

-அதன்பின், அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு சூடாக்கவும். பிஸ்கட் கலவையை உருட்டி விரும்பிய வடிவத்தில் வைத்து, அதில் வைக்கவும்.

- 180 டிகிரி சென்டிகிரேடில் 15-20 நிமிடங்கள் சுடவும். அதை குளிர வைத்தால் சுவையான பிஸ்கட் தயார். 

ஜீரா குக்கீகள்

ஜீரா பிஸ்கட்கள்
ஜீரா பிஸ்கட்கள்

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் (உப்பு சேர்க்காதவை) - 425 கிராம்;

நாட்டுச் சர்க்கரை - 230 கிராம்;

கோதுமை மாவு - 550 கிராம்;

உப்பு - 5 கிராம்;

சீரகம்- 5 கிராம்

செய்முறை:

- வெண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலக்கவும்.

- கோதுமை மாவு மற்றும் உப்பினைக் கலக்கவும்.

- சீரகத்தை லேசாக வறுத்து, கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு போட்டு கிளறவும்.

- வெண்ணெயை வைத்து மாவினை படிப்படியாக கலக்கவும். 1-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 60 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின், அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு சூடாக்கவும். பிஸ்கட் கலவையை உருட்டி விரும்பிய வடிவத்தில் வெட்டவும்.

- 180 டிகிரி சென்டிகிரேடில் 15-20 நிமிடங்கள் சுடவும். ஆற வைத்து, காற்று புகாத கலனில் சேமித்து உண்டு மகிழுங்கள். 

WhatsApp channel

டாபிக்ஸ்