Diabetes Drinks: சுகரை கண்ட்ரோல் செய்ய முடியலையா? - இந்த 3 பானங்களை குடிச்சுப்பாருங்க!
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மூன்று பானங்கள் குறித்துப் பார்ப்போம்

சமீப காலங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் குறைந்த வயதில் நீரிழிவு நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
உங்கள் உடலால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை ரத்த சர்க்கரை இதய நோய், சிறுநீரக நோய், பார்வை இழப்பு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் உள்ளவர்களில் சுமார் 5-10% பேர் டைப் 1 நீரிழிவு வகையைச் சேர்ந்தவர்கள். அதாவது குழந்தைகள் இவ்வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
"இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 62 மில்லியன் ஆகும். அதனால், உலகின் நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா கருதப்படுகிறது. நீரிழிவு நோய்க்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இதில் அடங்கும்" என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா கூறுகிறார்.
ரத்த சர்க்கரையை நிர்வகிக்கும் மூன்று பானங்கள் குறித்துப் பார்க்கலாம்.
- வெந்தய நீர்:
வெந்தயத்தில் உள்ள குளுக்கோமன்னன் ஃபைபர் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரைகளை குடலில் உறிஞ்சுவதை தாமதப்படுத்துகிறது. வெந்தயத்தில் இருக்கும் ஃபெனுக்ரேசின் மற்றும் ட்ரைகோனெல்லின் போன்ற ஆல்கலாய்டுகள் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கப் பயன்படுகின்றன. மேலும் 4 ஹைட்ராக்ஸிசோலூசின் (4-OH Ile) அமினோ அமிலங்கள் கணையத்தில் இருந்து இன்சுலினை வெளியிட உதவுகின்றன. எனவே, நீரில் ஊறவைத்த வெந்தயத்தைக் குடிக்கலாம்.
2. சீந்தில் கொடி ஜூஸ்: சீந்தில் கொடி அல்லது அமிர்தவள்ளி கொடியில், பெர்பெரின் இருக்கிறது. இது ஒரு பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தீர்வாகும். சீந்தில் கொடி இலைகளின் சாறினை வெறும் வயிற்றில் குடிக்க ரத்த சர்க்கரை அளவு குறையும். நீரிழிவுக்குண்டான மருந்தான மெட்ஃபோர்மினைப் போலவே, பெர்பெரினும் செயல்படுகிறது.
3. இலவங்கப்பட்டை தேநீர்:
இலவங்கப்பட்டை கிளைகோஜன் இல்லாமல் உடலில் சேதம் அடைந்த உறுப்புகளை, பாதுகாக்க உதவுகின்றன.இலவங்கப்பட்டையில் காணப்படும் இயற்கையான மூலக்கூறுகள், ரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவும் இன்சுலினை சுரந்து சரிசெய்கின்றன. இலவங்கப்பட்டையைப் பொடியாக்கி தேநீராக்கி குடியுங்கள். ரத்த சர்க்கரை அளவு குறையும்.
இந்த பானங்களைச் சேர்ப்பதற்கு முன் ஒரு மருத்துவரிடம், உணவுப் பகுப்பாய்வைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்