ஒரே கல்லில் 2 மாங்காய்! சுடச்சுட இப்படி ஒரு தோசை; சாப்பிட சுவையும், ஆரோக்கியமும் போட்டி போட்டுக்கொண்டு கிடைக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஒரே கல்லில் 2 மாங்காய்! சுடச்சுட இப்படி ஒரு தோசை; சாப்பிட சுவையும், ஆரோக்கியமும் போட்டி போட்டுக்கொண்டு கிடைக்கும்!

ஒரே கல்லில் 2 மாங்காய்! சுடச்சுட இப்படி ஒரு தோசை; சாப்பிட சுவையும், ஆரோக்கியமும் போட்டி போட்டுக்கொண்டு கிடைக்கும்!

Priyadarshini R HT Tamil
Oct 13, 2024 05:07 PM IST

ஒரே கல்லில் 2 மாங்காய்! சுடச்சுட இப்படி ஒரு தோசை; சாப்பிட சுவையும், ஆரோக்கியமும் போட்டி போட்டுக்கொண்டு கிடைக்கும்!

ஒரே கல்லில் 2 மாங்காய்! சுடச்சுட இப்படி ஒரு தோசை; சாப்பிட சுவையும், ஆரோக்கியமும் போட்டி போட்டுக்கொண்டு கிடைக்கும்!
ஒரே கல்லில் 2 மாங்காய்! சுடச்சுட இப்படி ஒரு தோசை; சாப்பிட சுவையும், ஆரோக்கியமும் போட்டி போட்டுக்கொண்டு கிடைக்கும்!

முருங்கைக்கீரையில் 18 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. செல் சேதத்தை குறைத்து, இதயநோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 2 கைப்பிடியளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 10 பல்

தோசை மாவு – ஒரு கிண்ணம்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வதக்கவேண்டும். அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதை தோசை மாவுடன் கரைத்துக்கொண்டு தோசைகள் ஊற்றி எடுக்கவேண்டும்.

கோதுமை தோசை மாவு, ராகி தோசை மாவு, ரவா தோசை மாவு என எதில் வேண்டுமானாலும் கரைத்துக்கொள்ளலாம். தோசைகளாகவோ இட்லிகளாவோ வார்த்துக்கொள்ளலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, தேங்காய், புதினா, மல்லி, கறிவேப்பிலை என எந்த சட்னி வேண்டுமானாலும் அரைத்துக்கொள்ளலாம் அல்லது சாம்பார், குருமா, அனைத்து அசைவ குருமாக்களும் நன்றாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியமும் தரும். நல்ல சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.

முருங்கைக்கீரையின் நன்மைகள்

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.

நரம்பு மண்டல நோய்களைத் தடுக்கிறது.

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது.

மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

புற்றுநோயை சரியாக்குகிறது.

சிறுநீரகக் கற்களை கரைக்கிறது.

வீக்கத்தைப்போக்குறிது.

ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.

ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.

இதுபோன்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புக்கள், தகவல்கள் என அனைத்தையும் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இதுபோன்ற எண்ணற்ற குறிப்புக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.