10 Ways to Improve Grammar : ஆங்கில மொழி அறிவை வளர்க்கவேண்டுமா? அதற்கு இலக்கணம் அவசியம்! அதை வளர்க்க இதோ 10 வழிகள்!-10 ways to improve grammar want to improve your english language skills grammar is essential for that here are 10 ways - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  10 Ways To Improve Grammar : ஆங்கில மொழி அறிவை வளர்க்கவேண்டுமா? அதற்கு இலக்கணம் அவசியம்! அதை வளர்க்க இதோ 10 வழிகள்!

10 Ways to Improve Grammar : ஆங்கில மொழி அறிவை வளர்க்கவேண்டுமா? அதற்கு இலக்கணம் அவசியம்! அதை வளர்க்க இதோ 10 வழிகள்!

Priyadarshini R HT Tamil
Aug 06, 2024 04:54 PM IST

10 Ways to Improve Grammar : உங்கள் ஆங்கில மொழி அறிவை வளர்க்கவேண்மெனில், அதற்கு இலக்கணம் மிகவும் அவசியம். அதை வளர்க்க இங்கு 10 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி ஆங்கிலத்தில் இனி பிச்சு உதறுங்கள்.

10 Ways to Improve Grammar : ஆங்கில மொழி அறிவை வளர்க்கவேண்டுமா? அதற்கு இலக்கணம் அவசியம்! அதை வளர்க்க இதோ 10 வழிகள்!
10 Ways to Improve Grammar : ஆங்கில மொழி அறிவை வளர்க்கவேண்டுமா? அதற்கு இலக்கணம் அவசியம்! அதை வளர்க்க இதோ 10 வழிகள்!

மொழி

மொழிதான் நாம் ஒருவருடன் தொடர்புகொள்ள உதவும் சாதனம் ஆகும். நாம் தொடர்புகொள்ளும் நபர்களுக்கும் நாம் பேசும் மொது தெரிந்திருந்தால் மட்டும்தான் இருவரும் எளிதாக பேசிக்கொள்ள முடியும். அது ஒருவருக்கு தெரிவில்லையென்றால் கூட நம்மால் எதிரில் இருப்பவருடன் எளிதாக தொடர்புகொள்ள முடியாது.

ஜாடை மொழி ஓரளவு உதவினாலும், கருத்த பரிமாற்றத்தில் தொய்வு இருக்கத்தான் செய்யும். ஒரு மொழியை நாம் சரமாகப் பேச நமக்கு இலக்கணம் மிகவும் அவசியம். இன்றைய காலத்தில் உலகம் முழுவதிலும் நீங்கள் தொடர்புகொள்ளும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. எனவே நீங்கள் ஆங்கிலத்தை சரளமாக தங்குதடையின்றி பேசினால், உலகின் எந்த மூளையில் வேண்டுமானாலும் சென்று வாழமுடியும்.

ஆங்கிலம் இல்லாவிட்டாலும் கூட நீங்கள் உலகம் முழுவதும் சுற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், உங்களிடம் சரளமான ஆங்கிலம் இருக்கும்போது, அது உங்களுக்கு கூடுதல் சிறப்பு. எனவே ஆங்கிலத்தை தங்குதடையின்றி பேச உங்களுக்கு ஆங்கில இலக்கணம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். அதை வளர்த்துக்கொள்ளும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

இலக்கண ஆப்கள்

உங்களுடன் தொடர்புகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இன்ட்ராக்டிங் கிராமர் ஆப்கள் இன்று வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்தும்போது, உங்களின் இலக்கணம் சரியான உள்ளதா என்ற ஃபீட்பேக் உடனே கிடைத்துவிடும். இதை நீங்கள் விளையாட்டாக செய்து பார்த்து உங்கள் ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு பொது வெளியில் பேச கூச்சமோ அல்லது தயக்கமோ இருந்தால், நீங்கள் இந்த ஆப் மூலம் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

சத்தமாக வாசிப்பது

புத்தகங்கள், செய்தி கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும் சத்தமாக வாசிப்பது, உங்களுக்கு சரியான இலக்கணத்தை பயன்படுத்த உதவும். இது நீங்கள் வார்த்தைகளையும் சரியாக வடிவமைத்து பேச உதவும்.

இலக்கண ஃப்ளாஷ் கார்ட்கள்

இலக்கண விதிகள் கொண்ட ஃப்ளாஷ் கார்ட்களை தயாரிக்க வேண்டும். இதை எடுத்துக்காட்டுக்களை வழக்கமாக்கி, அதை நீங்கள் ஆய்ந்துகொள்ளவும் வேண்டும். இது உங்கள் அறிவை வளர்க்க உதவும்.

கல்வி வீடியோக்கள்

கல்வியில் கவனம் செலுத்தக்கூடிய வீடியோக்களை பாருங்கள். கல்வி தொடர்பான விளக்கங்களைத் தரும் எண்ணற்ற யூடியூப் சானல்கள் இருக்கும். அந்த வீடியோக்கள் உங்களுக்கு இலக்கண விதிகளை வகுத்துத் தரும். இது உங்கள் கண்களுக்கும் விருந்தாகும். உங்களுக்கு இலக்கண அறிவையும் கொண்டுவந்து சேர்க்கும்.

இலக்கண விளையாட்டுக்கள்

ஆன்லைனில் எண்ணற்ற இலக்கண விளையாட்டுகள், க்விஸ்கள் உள்ளன. இவை உங்களுக்கு இலக்கணத்தை கற்றுத் தருபவை. இது உங்களின் கற்றலை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும். மேலும் உங்களுக்கு இலக்கண அறிவையும் ஊட்டும். உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இவை இருக்கும்.

இலக்கண சவால்களில் ஈடுபடுங்கள்

ஆன்லைனில் இலக்கண சவால்கள் அல்லது போட்டிகளில் ஈடுபடுங்கள். அது உங்களின் இலக்கண அறிவை வளர்க்கும். உங்களை உற்சாகமாக ஆங்கிலம் கற்க வைத்து உங்கள் இலக்கண அறிவை பரிசோதிக்க தூண்டுதலாக அமையும்.

ஆன்லைன் ஃபோரம்களில் சேருங்கள்

ஆன்லைனில் எழுதும் மற்றும் கலந்துரையாடும் இடங்களில் கலந்துகொண்டு, உங்கள் இலக்கண அறிவை சோதித்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் தரும் ஃபீட்பேக்குகள் உங்கள் அறிவை அதிகரிக்க உதவும்.

தினமும் எழுதுங்கள்

தினமும் உங்கள் இலக்கண அறிவை பரிசோதிக்க சிறிது எழுதுங்கள். அன்றைய நிகழ்வுகளை எழுதுங்கள். நீங்கள் எழுதியதை படியுங்கள். மீண்டும் எழுதி எடிட்டும் செய்து பாருங்கள். ஒருமுறைக்கு பலமுறை எழுதும்போது, உங்களுக்கு சிறப்பான வாக்கியங்கள் கிடைக்கும். உங்களின இலக்கண அறிவு அதிகமாகும். இது உங்களின் தவறுகளை நீங்கள் திருத்திக்கொள்ளவும் உதவும்.

வொர்க் ஷீட்களில் பழகுங்கள்

ஆன்லைனில் எண்ணற்ற இலக்கண வொர்க் ஷீட்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவைற்றை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து கற்கலாம். குறிப்பாக இலக்கணத்தில் எதை நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ அது தொடர்பான தலைப்புகளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.

ஆன்லைனில் உள்ள இலக்கணம் சரிபார்க்கும் கருவிகளை பயன்படுத்துங்கள்

உங்களுக்கு இப்போதெல்லாம், ஆன்லைனில், எண்ணற்ற இலக்கண சரிபார்க்கும் ஃப்ளாட்ஃபார்ம்கள் உள்ளன. அவற்றில் நீங்கள் எழுதியவற்றை பதிவேற்றி, அவற்றையும் சரிபார்த்துக்கொள்ளலாம். இமெயில்கள், கட்டுரைகள், சமூக வலைதளங்களில் எழுதும் போஸ்ட்கள் ஆகியவற்றை பதிவேற்றி அதற்கு அந்த கருவிகள் கூறும் திருத்தத்தை சேர்த்து உங்கள் மொழி அறிவை மேம்டுப்படுத்திக்கொள்ளலாம். இதுபோல் நீங்கள் தொடர்ந்து செய்துவர உங்களின் மொழித்திறன் தானாகவே வளர்வதை கண்கூடாக பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.