உங்கள் உறவுகளை வளர்க்க உதவும் 10 பழக்கங்கள்! கட்டாயம் கடைபிடித்து நல்லவர் என பெயரெடுங்கள்!
உங்கள் உறவுகளை வளர்க்க உதவும் இந்த 10 பழக்கங்களை கட்டாயம் பழகி பயன்பெறுங்கள்.
உங்கள் உறவை வளர்க்க நீங்கள் சில பழக்கவழக்கங்களை கடைபிடிக்கவேண்டும். அது என்னவென்று பாருங்கள். உங்கள் உறவை எப்படி வளர்க்கலாம் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களுடன் உரையாடும்போது தெளிவாக உரையாட வேண்டும் என்பது அதற்கான முதல்படியாகும். மேலும் அவர்கள் கூறுவதை நீங்கள் உற்று கவனித்து கேட்கவேண்டும். இது மட்டுமின்றி உங்களின் உறவை வளர்க்க உதவும் 10 வழிகளை இங்கு கொடுக்கிறோம். அது என்னவென்று பாருங்கள். அதை பின்பற்றி உறவுகளை வளர்த்து, சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றவராகுங்கள்.
கவனிக்கும்போது முழுமையாக கவனிக்கவேண்டும்
ஒருவர் பேசுவதை கவனிக்க நேரிடுகிறது எனில், அதை நீங்கள் முழுமையாக உற்று கவனிக்கவேண்டும். பேசுவதை விட கவனிக்கவேண்டியது அவசியம். நீங்கள் பேசும்போது மற்றவர்கள் அதை கவனிக்கவேண்டும், இடையூறு செய்யக் கூடாது என்று எண்ணுகிறீர்கள் தானே. அதேபோல் மற்றவர்கள் பேசும்போது, நீங்கள் இடையூறு செய்யாமல் முழுமையாக கவனிக்கவேண்டும். மேலும் அவர்களை நீங்கள் முழுமையாக கவனித்தீர்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். அதை புரிந்துகொள்ளவும் முயற்சியுங்கள்.
உங்கள் அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்துங்கள்
உங்களின் நன்றியை நீங்கள் அன்றாடம் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் காட்டும்போது, அது உங்களின் உறவை வலுப்படுத்தும். சிறிய நன்றி தான். உங்களின் பிணைப்பை நீண்ட காலம் அழைத்துச் செல்லும்.
அனுதாபத்துடன் நடந்துகொள்ளுங்கள்
எப்போதும் மற்றவர்களின் நிலையில் உங்களைப் பொருத்தி பாருங்கள். அவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்க உதவும். இது உங்களின் பிணைப்பை மேலும் வலுவாக்க உதவும்.
தெளிவான மற்றும் நேர்மையான உரையாடலை செய்யுங்கள்
உரையாடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு ஆரோக்கியமான உறவுக்கு உங்கள் உரையாடல் தரமானதாக இருக்கவேண்டும். எனவே தெளிவான மற்றும் நேர்மையான உரையாடலை உங்கள் இணையர் அல்லது நண்பர்கள் அல்லது மற்றவர்களிடம் எப்போதும் நடத்துங்கள். இது அவர்களுடனான உங்கள் உறவை வலுப்படுத்த எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.
தரமான நேரம் செலவிடுங்கள்
வேறு எந்த இடையூறுகளும் இல்லாத தரமான நேரத்தை நீங்கள் உங்கள் இணையர் அல்லது மற்றவர்களுடன் செலவிடவேண்டும். அப்போதுதான் அந்த் உறவு வலுப்பெறும். உங்களின் நேரம் மற்றும் கவனம் இரண்டையும் அவர்களுக்கு கொடுக்கவேண்டும். இது அவர்களுடனான உங்கள் தொடர்பை மேலும் அதிகரிக்க உதவும்.
அவர்களின் எல்லைகளுக்கு மதிப்பு கொடுங்கள்
மற்றவர்களை புரிந்துகொள்வது மற்றும் மதிப்பது என்பது உறவுகளை பேணுவதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனிப்பட்ட எல்லைகள், உங்கள் வாழ்வில் நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் மற்றவர்கள் தேவையற்ற எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொள்ளாதீர்கள். மாறாக அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் உறவை உண்மையாக்க உதவும்.
உங்களை சார்ந்திருக்க வையுங்கள்
உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், நம்பகமானவராக இருப்பதிலும் இருந்து எப்போதும் மாறிவிடாதீர்கள். தொடர்ந்து நீங்கள் ஒரு விஷயத்தை செய்யும்போது, அது அவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
மனக்கசப்புக்களை தவிருங்கள்
கடந்த காலங்களிலும், அது கொடுத்த வலிகளிலும் மூழ்கிக் கிடக்காமல், மனக்கசப்புக்களில் இருந்து வெளியே வந்துவிடுங்கள். மனிதர்களை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள். உறவுகளை எளிதில் உடைக்கச் செய்யும் ஆயுதமாக மனக்கசப்புகள் உள்ளது.
உங்களை அன்பு செய்யுங்கள்
நீங்கள் மற்றவர்களை நேசிப்பதுபோது, உங்களையும் அன்பு செய்யுங்கள். உங்களையும் நேசியுங்கள். உங்கள் மீதும் அக்கறை கொள்ளுங்கள். உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் உறவிலும் நீங்கள் சிறப்பான நபர் என்பதை குறிப்பிடலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்