10 இட்லி சாப்பிடுவீங்க; இந்த பூண்டு சட்னி இருந்தா? தேவாமிர்தம் தோற்கும் சுவையைக் கொண்டது!
பூண்டு காரச் சட்னியை இப்படி செய்து பாருங்கள் சூப்பர் சுவையில் அசத்தும்.
இந்த பூண்டு சட்னி இட்லியைவிட ஊத்தப்பம் அல்லது தோசைக்கு மிகவும் ஏற்றது. கிரிஸ்பி தோசை செய்யும்போது, இதை அந்த தோசையிலே தடவி முறுவலாக எடுத்து சாப்பிட்டால், தேவாமிர்தமே தோற்கும். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். இந்த சட்னியை தண்ணீர் அதிகம் சேர்த்து அரைக்கக்கூடாது. தேவைப்பட்டால் அம்மியில் அரைத்துக்கொள்ளலாம். இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். பூண்டு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆனால் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதுபோல் சட்னி அரைத்து கொடுத்தால் அவர்களுக்கும் பூண்டு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
பூண்டு – 20 பல்
சின்ன வெங்காயம் – 10 பல்
புளி – சிறிய துண்டு
கல் உப்பு – தேவையான அளவு
வர மிளகாய் – 5
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து பூண்டு, சின்ன வெங்காயம், புளி, வரமிளகாய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அதை ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து, உப்பு போட்டு அரைத்து துவையல் பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கினால், சூப்பர் சுவையான பூண்டு சட்னி தயார். இதை சூடான தோசை, இட்லி, ஆப்பம், ஊத்தாப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
பூண்டின் நன்மைகள்
தினமும் 4 முதல் 6 பற்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மலைப்பூண்டைவிட சிறிய பூண்டுதான் அதற்கு சிறந்தது. அதை நீங்கள் பின்பற்ற சாதத்துடனே சேர்த்து சாப்பிடும் வழி ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்தால் தினமும் காலை டிஃபனுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். உடல் எடை அதிகரிக்க உதவும், ரத்த கொதிப்பு அதிகம் ஆவதைத்தடுக்கும். உடலுக்குள் நுண் கிருமிகள் புகாமல் பார்த்துக்கொள்ளும். மாதவிடாயை சீராக்கும். ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும். இதுபோன்ற பல வழிகளில் அது நமது உடலுக்கு நன்மைகளைத் தருவதால் இந்த பூண்டை நாம் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். எனவே எப்படி சேர்க்கலாம் பாருங்கள். முழு உடலுக்கும் பூண்டு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
பூண்டு அதன் தனித்தன்மையான கார சுவை மற்றும் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. தினமும் உணவில் பூண்டை கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டை மென்று சாப்பிடலாம். அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அது உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்கிறது. அது என்ன நன்மைகளை உங்கள் உடலுக்கு செய்கிறது என்று பாருங்கள்.
இதய நோய் ஆபத்தை குறைக்கிறது
புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் கொண்டது.
மூட்டுவலியைப் போக்குகிறது.
செரிமானத்தை அதிகரித்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது
எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தை தருகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்