10 Benefits of Kupaimeni Keerai : குப்பையான மேனியை குணப்படுத்துவதால் குப்பைமேனியானது; அதன் நன்மைகளை பார்க்கலாமா?
10 Benefits of Kupaimeni Keerai : குப்பையான மேனியை குணப்படுத்துவதால் குப்பைமேனியானது; அதன் நன்மைகளை பார்க்கலாமா?
குப்பைமேனி கீரை
கீரை வகையைச் சேர்ந்து ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் அகாலிஃபா இண்டிகா என்பதாகும்.
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஏமன், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் குப்மைமேனிக்கீரை பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் இந்த மூலிமை சாலையோராங்களில் இருக்கும். இது வறண்ட நிலத்தாவரமாகும். இதை நீங்கள் பரவலாக சாலையோரங்களில் பார்க்கலாம். அனைத்து இடங்களிலும் இருக்கும் இந்த குப்பைமேனிக்கீரையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
மருத்துவ குணங்கள்
பாரம்பரிய மருத்துவத்தில் குப்பைமேனிக்கீரைகள் பயன்படுத்தப்படுகிறது. இது வீக்கத்தை குறைக்கிறது. பாக்டீரியா, புற்றுநோய், நீரிழிவுநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது.
மேலும் ஆஸ்துமா, இருமல், நிமோனியா, பக்கவாதம் என அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சொரி, சிரங்கு உள்ளிட்ட எண்ணற்ற சருமநோய்களை குணப்படுததுகிறது. தலைவலி இதன் பூக்கள் மருந்தாகிறது. முகப்பருக்கள், வயிற்றில் உள்ள பூச்சிகள், சொரியாசிஸ், எக்ஸைமா உள்ளிட்ட சரும நோய்கள் மற்றும் தேவையற்ற முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
இதன் வேர்களும் வயிற்றுப்போக்கு, நெஞ்சுவலி மற்றும் காயங்களை குணப்படுத்துகிறது. வயிற்று வலியைப்போக்கி, வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கி, மலச்சிக்கல், காய்ச்சல், நீரிழிவு ஆகிய பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது.
குப்பைமேனிக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள்
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
குப்பைமேனி கீரையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், இந்த கீரையை நீங்கள் வீக்கம் இருக்கும் இடத்திலோ அல்லது காயம் பட்ட இடத்திலோ அரைத்து பூசும்போது, அவை விரைந்து குணமடைகின்றன.
வலி நீக்கி
குப்பைமேனிக்கீரைக்கு வலியை போக்கும் தன்மை உள்ளது. இந்த அற்புத மருந்து மாசு, மருக்களை நீக்கும் அற்புத வல்லமை கொண்டது. குப்பைமேனிக்கீரையை அரைத்து சருமத்தில் தடவும்போது, அது வீக்கம், காயம், சருமநோய்கள், அரிப்பு, சொரி, சிரங்கு ஆகியவற்றைப் போக்குகிறது.
வயிற்றில் உள்ள புழுக்கள்
குப்மைமேனிக்கீரையில் உள்ள அந்தெல்மின்டிக் பண்புகள், அதன் சாறை வாய் வழியாக மக்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள்
சரும பிரச்னைகளை அனைத்தையும் போக்கும் தன்மைகொண்டது குப்பைமேனிக்கீரை. இதில் பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான பண்புகள் உள்ளன. குப்பைமேனிக்கீரை எண்ணெய், பல்வேறு சரும வியாதிகளை குணப்படுத்துகிறது. அது எக்சைமா என்ற சருமப்பிரச்னையை குணப்படுத்துகிறது. இந்தக் கீரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள், பல்வேறு சரும பிரச்னைகளை குணப்படுத்துகின்றன.
விஷத்துக்கு எதிரான குணங்கள்
குப்பைமேனிக்கீரை நச்சுக்களை போக்கும் தன்மை கொண்டது, இதன் மற்றொரு மருத்துவகுணமாக இது பார்க்கப்படுகிறது. கட்டுவிரியன் என்ற பாம்பு கடித்தால் அதில் இருந்து வெளியேறும் விஷத்தை குப்பைமேனிக்கீரையின் சாறு முறிக்கிறது. விரியன் பாம்பு கத்தவர்களுக்கு இந்த இலை காய்ச்சி எடுத்துக்கொடுக்கப்படுகிறது.
காயங்களை ஆற்றும் திறன்
குப்பைமேனிக்கீரையை வைத்து காயங்களை குணப்படுத்த முடியும். இந்த செடியே அதன் காயங்களை ஆற்றும் தன்மைக்காக அறியப்படுவதுதான். இதன் சாறை காயம்பட்ட இடத்தில் தடவினால், அந்தக்காயம் விரைவில் குணமாகும். அது காயத்தைச் சுற்றியும் பாதுகாப்பை ஏற்படுத்தி, அது விரைவில் குணமடை வழிவகுக்கிறது.
அல்சருக்கு எதிரான குணங்கள்
குப்பைமேனிக்கீரையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்துள்ளன. இந்தச் செடியின் சாறை பருகும்போது, அது அல்சலை குணப்படுத்துவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது.
நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள்
குப்பைமேனிக்கீரையில், நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இது உடலில் ஏற்படும் திடீர் சர்க்கரை உயர்வைக்கட்டுப்படுத்துகிறது. இது நீரிழிவு நோய்க்கு மருந்தாகிறது.
லார்விசிடல் மற்றும் ஓவிசிடல் குணங்கள்
மலேரியா, என்ற நோயை அனோஃபிலிஸ் ஸ்டெஃபின்சி கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. மலோரியாவைக் கட்டுப்படுத்த குப்பைமேனிக்கீரை உதவுகிறது. இந்த இலையின் சாறை சருமத்தில் தடவினால் கொசுக்கள் உங்களை கடிக்காது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்
குப்பைமேனிக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்களுக்கு வயோதிகம் ஏற்படாமல் தடுக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்