10 After Dinner Rituals : சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா? செரிமானத்தில் தாமதமா? இந்த 10 விஷயங்கள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  10 After Dinner Rituals : சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா? செரிமானத்தில் தாமதமா? இந்த 10 விஷயங்கள் உதவும்!

10 After Dinner Rituals : சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா? செரிமானத்தில் தாமதமா? இந்த 10 விஷயங்கள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 06:29 AM IST

வயிறு உப்புசம், செரிமானம் என அனைத்துக்கும் சாப்பிட்ட பின் செய்யவேண்டியது என்ன?

10 After Dinner Rituals : சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா? செரிமானத்தில் தாமதமா? இந்த 10 விஷயங்கள் உதவும்!
10 After Dinner Rituals : சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா? செரிமானத்தில் தாமதமா? இந்த 10 விஷயங்கள் உதவும்!

ப்ரோபயோடிக்குகள் எடுத்துக்கொள்வது

நீங்கள் கஃபீர் அல்லது யோகர்ட் போன்ற சில ப்ரோபயோடிக் உணவுகளை உங்கள் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. இதனால் உங்களின் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது.

சோம்பு மெல்ல வேண்டும்

சோம்பில் உங்கள் செரிமானத்தை தூண்டும் இயற்கை செரிமான உட்பொருட்கள் உள்ளது. இது உங்களுக்கு வயிறு உப்புசம் ஏற்படுவதைக் குறைக்கும். மேலும் இதை நீங்கள் சாப்பிட்ட பின் மெல்லும்போது, வாயுத்தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கும்.

10 நிமிட குறு நடை

நீங்கள் இரவு உணவு உண்ட பின் 10 முதல் 15 நிமிடங்கள் மெல்ல நடக்கவேண்டும். இது உங்களின் செரிமானத்தைத் தூண்டுகிறது. வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. இதனால் நீங்கள் உட்கொண்ட உணவு உங்களின் செரிமான பாதையில் நல்ல முறையில் செல்ல உதவுகிறது.

சூடான தண்ணீர் அல்லது மூலிகை தேநீர்

சூடான தண்ணீர் அல்லது இஞ்சி, புதினா, கேமோமைல் தேநீர் என எதையாவது பருகலாம். இது உங்கள் செரிமான தசைகளை இதமாக்கும். இதனால் உங்களின் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். இது உங்கள் வயிறு உப்புசத்தையும் போக்கும்.

நீர்ச்சத்து

சாப்பிட்டு முடித்த பின்னர் உங்களுக்கு தாகம் ஏற்படும்போது, கட்டாயம் தண்ணீர் பருகவேண்டும். இடையில் பருகினால் உடலில் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்கிறது. ஆனால் அது செரிமானத்தை மெதுவாக்குகிறது. எனினும், நீங்கள் சாப்பிட்டவுடன் அதிகம் தண்ணீர் பருகக்கூடாது.

மெல்லிய உடற்பயிற்சி

சில மிதமான யோகா பயிற்சிகளை நீங்கள் சாப்பிட்டவுடன் செய்யலாம். அது உங்களுக்கு வயிற்றில் உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் வயிற்றில் எவ்வித தொந்தரவுகளும் ஏற்படாமல் வயிற்றுக்கு இதமளிக்கிறது.

சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது

நீங்கள் சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு படுக்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நீங்கள் படுத்தால், அது உங்கள் உடலில் அமில எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும் உண்ட உணவு செரிக்க உதவாது. எனவே சாப்பிட்டவுடன் படுப்பதை அறவே தவிர்க்கவேண்டும்.

உங்கள் வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்யுங்கள்

உங்கள் வயிற்றுப் பகுதியில் மெல்லிய மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் வயிற்றை தேய்த்துக் கொடுக்கவேண்டும். இது உங்கள் செரிமான மண்டலத்தை தூண்டும். இதனால் உங்கள் வயிற்றின் அசவுகர்யங்கள் குறைந்து, வயிறு உப்புசத்துடன் தொடர்புடைய அசவுகர்யங்கள் குறையும். உங்கள் வயிற்றில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

இனிப்புகள்

சாப்பிட்டவுடன் இனிப்புகள் அதிகம் சாப்பிடக்கூடாது. மிகவும் குறைவாக இயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அவை டார்க் சாக்லேட்கள் அல்லது கடலை மிட்டாய்கள் என இருக்கலாம். இது உங்களுக்கு ஏற்படும் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற ஆவலையும் திருப்திபடுத்தும். உங்கள் செரிமான மண்டலத்துக்கும் அதிக பளு கொடுக்காது. செரிமான ஆரோக்கியத்தையும் காக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.