Tamil News  /  Tamilnadu  /  The Path Taken By The Rajiv Gandhi Assassination Case

Rajiv Gandhi Assassination Case:ராஜீவ் காந்தி கொலை வழக்கு-அன்று முதல் இன்று வரை!

Divya Sekar HT Tamil
Nov 18, 2022 01:47 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

1991 ஜூன் 11: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார்.

1991 ஜூன் 14: நளினி, முருகன் இருவரும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

1991 ஜூலை 22: சுதேந்திரராஜா என்ற சாந்தன் கைதுசெய்யப்பட்டார்.

1998 ஜனவரி 28: இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

1999 மே 11: விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1999 அக்டோபர் 8: தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் உச்ச நீதிமன்றத்தில் கோரிய மறு ஆய்வு மனு தள்ளுபடி.

1999 அக்டோபர் 10: ஆளுநருக்கு கருணை மனு அனுப்பிய சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி

1999 அக்டோபர் 29: ஆளுநர் பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

1999 அக்டோபர் 29 : தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

2000 ஏப்ரல் 19: முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவின்படி, நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 24: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 26: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

2000 - 2007: இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்.

2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2007: குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் மூவரின் கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

2008 மார்ச் 19: பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினார்.

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

2011 ஆகஸ்ட்: மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18 : கருணை மனுக்கள் நிலுவையை காரணம் காட்டி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19 : தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

2014 பிப்ரவரி : தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெறப்பட்டது.

2014 ஏப்ரல் 25: இந்த வழக்கில் மத்திய - மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 டிசம்பர் 2 : மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிய 5 நீதிபதிகள் அமர்வு, 161ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் விடுவிக்கலாம் என தீர்ப்பளித்தது.

2016 : நளினி முதன் முதலாக 12 மணி நேரம் பரோலில் வந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு

2018 செப்டம்பர் 6 : ஆளுநர் 161-வது பிரிவின் கீழ் 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

2018 செப்டம்பர் 9 : 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

2021 மே 20 : தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிடுமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

2022 மே 18 : ஆயுள் தண்டனையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

2022 நவம்பர் 11 : விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

2022 நவம்பர் 17 : 31 ஆண்டுகள் சிறையில் இருந்த 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

WhatsApp channel