தமிழ் செய்திகள்  /  Latest News  /   Tamil Live News Updates September 24-09-2022

5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

September 24 Tamil News Updates: தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

02:13 AM ISTDivya Sekar
• Share on Facebook
02:13 AM IST

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

Sat, 24 Sep 202211:38 AM IST

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

27.09.2022 மற்றும் 28.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.

5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Sat, 24 Sep 202209:00 AM IST

பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிறதா? -விஜயகாந்த்

மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் வெறும் வெற்று அறிக்கைகளையும், அறிவிப்புகளும் வெளியிடும் தமிழக அரசு, சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் மேற்கூரை தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சேதமடைந்த மற்றும் நிழற்குடைகள் இல்லாத பேருந்து நிறுத்தங்களை கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Sat, 24 Sep 202206:58 AM IST

கால்நடை மருத்துவ படிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றவர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கும் அக்டோபர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கால்நடை மருத்துவப் படிப்பு

கால்நடை மருத்துவப் படிப்பு

Sat, 24 Sep 202206:26 AM IST

புதுச்சேரியில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல்

புதுச்சேரியில் அதிக காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பன்றி காய்ச்சல்

பன்றி காய்ச்சல்

Sat, 24 Sep 202204:54 AM IST

இஸ்லாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை - வைகோ கண்டனம்!

இஸ்லாமிய அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும்,இஸ்லாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Sat, 24 Sep 202203:58 AM IST

தமிழ் பரப்புரைக்கழகத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்ப் பரப்புரைக் கழகத்திற்கான பணிகளை அறிமுகப்படுத்தும் விதமாக, தமிழ்ப் பரப்புரைக் கழகத் தொடக்க விழாவும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் வண்ணம் நிலை -1க்கான முதல்பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தலுக்கான இதர சேவைகள் வெளியீட்டு விழாவும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sat, 24 Sep 202203:50 AM IST

பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம்

பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கழிவு மேலாண்மையில் அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும், வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மாநிலத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான திட்டம் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது.

பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம்

பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம்

Sat, 24 Sep 202203:45 AM IST

திருச்சியில் அக்டோபர் 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 9 வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொது அமைதி,பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

Sat, 24 Sep 202203:39 AM IST

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும். நாளை முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.

மிதமான மழை

மிதமான மழை

Sat, 24 Sep 202203:35 AM IST

அதிகரித்து வரும் காய்ச்சல்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் - ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதில் தனிக் கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணமும், யதார்த்தமான கள நிலவரத்திற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்