தமிழ் செய்திகள்  /  Latest News  /  Tamil Live News Updates October 19.10.2022

மல்லிகார்ஜுன கார்கே, சோனியா

October 19 Tamil News Updates: கார்கேவுக்கு சோனியா, ராகுல் வாழ்த்து

10:59 AM ISTKarthikeyan S
  • Share on Facebook
10:59 AM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா மற்றும் ராகுல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Wed, 19 Oct 202210:59 AM IST

ஊதிய உயர்வு

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமானது, தனது விமானிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சுமார் 55 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.

Wed, 19 Oct 202210:57 AM IST

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வரும் 22-ம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Wed, 19 Oct 202209:21 AM IST

அதிக புகழ்பெற்ற உணவாக ஹைதராபாத் ‘ஹலீம்’ தேர்வு

இந்திய உணவு வகைகளில் புகழ்பெற்ற ரசகுல்லா, பிகானரி புஜியா, ரட்லாமி சேவ் உள்ளிட்ட 17 உணவு வகைகளில் ஹைதராபாத்தின் ‘ஹலீம்’ அதிக புகழ்பெற்ற இந்திய உணவாக புவிசார் குறியீடு வென்றுள்ளது.

<p>ஹலீம்</p>
ஹலீம்

Wed, 19 Oct 202209:17 AM IST

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் பொறுப்பேற்பு

திருப்பூர் சார் ஆட்சியராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் பொறுப்பேற்றார். பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றிருந்தார்

Wed, 19 Oct 202208:28 AM IST

முதல்வர் ஸ்டாலின் உறுதி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அருணா ஜெகதீசன் குற்றம்சாட்டிய 17 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; நேரடியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Wed, 19 Oct 202208:26 AM IST

காஷ்மீர் தனிநாடு

பிகார் மாநிலத்தில் 7ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் காஷ்மீர் தனிநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பது பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Wed, 19 Oct 202208:24 AM IST

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களை எடுக்கலாம் என வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Wed, 19 Oct 202208:23 AM IST

இபிஎஸ் கைதுக்கு எதிர்ப்பு 

சென்னையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.

Wed, 19 Oct 202205:55 AM IST

தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க காரைக்குடி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அக்டோபர் 20 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06022) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.19) அன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Wed, 19 Oct 202204:49 AM IST

போக்குவரத்து நெரிசல்

பட்டாசு வாங்குவதற்காக சாத்தூர் மற்றும் விருதுநகர் மார்க்கங்களில் இருந்து சிவகாசியை நோக்கி வாகனங்கள் அணி வகுத்து வந்த வண்ணம் இருப்பதால், புறவழிச் சாலை மற்றும் டோல்கேட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல். சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Wed, 19 Oct 202205:51 AM IST

இபிஎஸ் கைது 

அதிமுக அறிவித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

<p>இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.</p>
இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.

Wed, 19 Oct 202204:21 AM IST

மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான கலந்நாய்வு இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு இணைய வழியில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 19 Oct 202204:20 AM IST

பக்தர்கள் செல்ல தடை

விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

Wed, 19 Oct 202203:31 AM IST

கார்த்திக் மெய்யப்பன் சாதனை

டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் தமிழன் என்ற சாதனையை ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் படைத்துள்ளார்.

Wed, 19 Oct 202203:30 AM IST

தேவர் தங்க கவசம்

தேவர் தங்க கவசம் தொடர்பாக, தனக்கு அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Wed, 19 Oct 202203:29 AM IST

காவல்துறை அனுமதி மறுப்பு

தமிழக சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Wed, 19 Oct 202203:29 AM IST

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை , முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

<p>முதல்வர் ஸ்டாலின்</p>
முதல்வர் ஸ்டாலின்

Wed, 19 Oct 202203:28 AM IST

பிரதமர் மோடி

குஜராத் ராஜ்கோட்டில் இன்று முதல் மூன்று நாள் நடைபெறும் இந்திய நகர்ப்புற வீட்டுவசதி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Wed, 19 Oct 202203:28 AM IST

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவு பெற்றது. பின்னர் அனைத்து மாநில ஓட்டுப்பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.