Right-சைடு இண்டிகேட்டர் போட்டு Left சைடு திரும்பிய ஈரோடு வாக்காளர்கள்! கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல்!
"பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 1,761 பேரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் இந்த கணிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது"
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ள நிலையில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய அமைப்பான IPDS எனப்படும் (INDIAN POLITICAL DEMOCRATIC STRATEGIES) அமைப்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதிமுகவில் 22 சதவீதம் பேர், திமுகவில் 18 சதவீதம் பேர், பிறகட்சிகளை சேர்ந்த 10 சதவீதம் பேர் மற்றும் எந்த கட்சிகளையும் சாராத 50 சதவீதம் என பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 1,761 பேரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் இந்த கணிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 35 சதவீதமும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 33 சதவீதமும், வன்னியர், பட்டியல் வகுப்பினர், தேவர், நாடார், சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களை சேர்ந்தவரக்ள் 32 சதவீதம் பேரும் வசிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் கட்சி எது?
திமுக அணி - 42%
அதிமுக அணி - 40.15%
நாம் தமிழர் - 5.69%
பிற 10.95%
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் பேச்சு மற்றும் செயல்பாடுகள் எப்படி உள்ளது?
வரவேற்பு 59%
அதிக வெறுப்பு 28%
எதுவும் சொல்வதற்கில்லை 13%
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதை ஈரோடு தொகுதி மக்கள் விரும்புகிறார்களா?
விருப்பம் - 39%
விரும்பவில்லை - 51%
எதுவும் சொல்வதற்கில்லை - 10%
திமுக அரசின் அணுகுமுறையும், நம்பகத்தன்மையும் குறித்து:-
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் அமைச்சர்கள் செயல்பாடு - 21%
அரசு மீது வெறுப்பு ஏற்படுகிறது - 39
நம்பகத்தன்மை ஏற்படவில்லை - 30
எதுவும் சொல்வதற்கில்லை - 10
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
ஆதரவு - 49%
எதிர்ப்பு - 35
எதுவும் செல்வதற்கில்லை - 16
தமிழகட்தின் அரசியல் கட்சியில் சிறந்த எதிர்க்கருத்துகளை பதிவு செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் தலைவர் யார்?
அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி
சீமான்
தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டுமா? ஆட்சியை கலைத்து மறு தேர்தல் நடத்த வேண்டுமா?
ஆட்சியை கலைக்க வேண்டும் - 38%
ஆட்சி தொடர வேண்டும் - 22%
பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் - 10%
பாராளுமன்ற தேர்தலை சேர்த்து சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும்- 30%
தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு வாக்கு?
காங்கிரஸ் - 45%
அதிமுக - 39.52%
நாம் தமிழர் 9.51%
பிற - 5.20%
டாபிக்ஸ்