உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரிக்களை நீண்ட ஆயுள் பெற வைப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரிக்களை நீண்ட ஆயுள் பெற வைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரிக்களை நீண்ட ஆயுள் பெற வைப்பது எப்படி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Feb 28, 2022 05:31 PM IST

நீங்கள் பார்த்து பார்த்து ஆசையாக வாங்கும் ஸ்மார்ட்போன் பேட்டரிக்களின் ஆயுள் நீண்ட காலம் நன்றாக நீடித்து உழைக்க வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

<p>ஸ்மார்ட்போன் பேட்டரிகள் நீண்ட நாள் உழைக்க என்ன செய்ய வேண்டிய டிப்ஸ்</p>
<p>ஸ்மார்ட்போன் பேட்டரிகள் நீண்ட நாள் உழைக்க என்ன செய்ய வேண்டிய டிப்ஸ்</p>

குறிப்பாக பேட்டரி பற்றிய அமைசங்களை பார்க்கும்போது அவை சிறந்தவையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். இதில் பேட்டரி விரைவாக காலியாக கூடாது என்பதும், விரைவாக சார்ஜ் ஆகிவிடவதாகவும் இருக்க வேண்டும் என்று பலரது பொதுவான விருப்பமாகவே உள்ளது.

சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் அனைத்து விதமான தொழில்நுட்பகளும் இருப்பதோடு, விரைவாக சார்ஜ் செய்யும் வசதியும் இடம்பெறுகிறது. 

இதன்மூலம் மதியம் ஆவதற்குள்ளாகவே தங்களது ஸ்மார்ட்போன்களின் பேட்டரிக்கள் காலியான காரணத்தால் பவர்பேங்க்கை கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரியும் காலம் மலையேறிவிட்டது. தொடர்ச்சியான இணைய பயன்பாடு,  கேம் விளையாடு போன்ற காரணங்கள் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் ஸ்மார்ட்போன் பேட்டரிகள் விரைவாக காலியாகிறது. 

பேட்டரியின் ஆற்றலை நன்கு சாப்பிடும் வைப்ரேஷன்

ரிங்டோன்களை விட வைப்ரேஷன் மோட், பேட்டரியிலிருந்து அதிகபட்ச ஆற்றலை கரைத்துவிடுகிறது. டைப் செய்யும்போதும், மெசேஜ் அல்லது கால் நோட்டிபிக்கேஷனின் போதும் லேசான வைப்ரேஷனை வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் இது கணிசமான அளவு பேட்டரி ஆற்றலை எடுத்துக்கொள்ளும். எனவே இவற்றுக்கு மாற்று வழியை பின்பற்றுவதன் மூலம் ஸ்மார்ட் போன்களின் பேட்டரி ஆயுளை மேம்படுத்தலாம்.

பேட்டரி ஆற்றலை சேமிக்க உதவும் கருப்பு நிறம்

உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களில் கருப்பு நிறத்திலான வால்பேப்பர் வைப்பதன் மூலம் அதன் பேட்டரி ஆயுளை நீடிக்கலாம். உங்களது ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே இருந்தால், இருண்ட வால்பேப்பர்கள் மூலம் பேட்டரி ஆற்றலை சேமிக்கலாம். ஏனென்றால் AMOLED டிஸ்ப்ளேக்கள் பிரகாசமான வண்ணங்களை வைத்தால் மட்டுமே பேட்டரிக்களிலிருந்து ஆற்றலை உறிஞ்சும். எனவே வண்ணமயமான நிறத்தை தவிர்த்தாலோ அல்லது குறைத்தாலோ ஆற்றல் உறிஞ்சுவதை தவிர்க்கலாம்.

பயன்படுத்தப்படாத அம்சங்களை ஆப் செய்ய வேண்டும்

ப்ளுடூத், ஜிபிஎஸ், ஓய்-பை, மொபைல் டேட்டா (இணையத்தை பகிரும் ஹார்ஸ்பாட் அம்சம்) போன்றவை ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமாக உள்ளது. இவை அனைத்தும் பேட்டரிகளை விரைவில் காலியடைய செய்கிறது. எனவே மேற்கூறிய அம்சங்கள் தேவைப்படாதபோது அனைத்தையும் ஆப் செய்துவிட வேண்டும். அதேபோல் பேட்டரி சேவர் மோட் அல்லது ஏரப்ளேன் மோட் ஆகியவை உங்களது பேட்டரிக்களின் ஆயுளை நீடிக்க உதவுகிறது.

ஆட்டோ சிங்க் விஷயங்களை ஆப் செய்யவும்

ஜிமெயில், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்பட பல்வேறு செயலிகளில் டேட்டாக்கள் ஆட்டோ சிங்க் செய்யப்பட்டிருப்பதால் லேட்டஸ்ட் அப்டேட்களை பெற ஒவ்வொரு முறையும் ரெப்ரெஸ் செய்ய வேண்டும். ஆனால் பின்னணி பணிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் அதிகம் செய்ய வேண்டி இருப்பதால் பேட்டரிக்களின் ஆற்றல் அதிகமாக தேவைப்படும். 

எனவே செட்டிங்ஸ் சென்று கூகுள் அக்கவுண்டில் அனைத்து செயலிகளுக்குமான ஆட்டோ-சிங்க் ஆப்ஷனை ஆப் செய்யவும். இதனால் ஒவ்வொரு முறையும் உங்களது செயலிகளுக்கு தகவல் வருவது தவிர்க்கப்படும்.

ஸ்கிரீன் விட்ஜெட்களை அகற்றவும்

அனைத்து தகவல்களையும் உங்களது ஸ்கிரீனில் காட்டுவதற்கு விட்ஜெட் ஆப்ஷன்கள் உதவி புரிகிறது. அதேசமயம் இது உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரிக்களில் அழிவை ஏற்படுத்துகிறது. எனவே தேவையில்லாத ஆணியாக திகழும் இந்த விட்ஜெட்களை ஸ்மார்ட்போனிலிருந்து அகற்றுவதன் மூலம் பேட்டரி ஆயுள் மேலும் நீட்டிக்கப்படும்.