மில்லி விநாடிகளில் செயல்பாடு ஏர்பேக் - இருசக்கர வாகனத்தில் புதிய தொழில்நுட்பம்
இருசக்கர வாகனத்தின் மேற்பகுதியில் உள்ள ப்ரேமில் ஏர்பேக் பொருத்தப்பட்டு, மில்லி விநாடிகளில் அது விரிவடையும் விதமாக புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் தொடர்பாக ஆட்டோலிவ் என்ற நிறுவனம் ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் மேம்படுத்தப்பட்ட ஸ்டிமுலேஷன் கருவிகளுடன், முழு அளவிலான விபத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தி பியாக்கியோ குழுமம், வாகன பாதுகாப்பு அமைப்பான ஆட்டோலிவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சக்தி வாய்ந்த ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள் என இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த ஏர்பேக் உருவாக்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இருசக்கர வாகனங்களுக்கான ஏர்பேக் உருவாக்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"இந்த ஏர்பேக் பயன்பாடு சோதனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் வணிகமயமாக்கப்படவும் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் 2030ஆம் ஆண்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பாதுகாப்பதை நோக்கிய முக்கிய படியாக பார்க்கிறோம்" என்ற ஆட்டோலிவ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மக்கேல் பிராட் தெரிவித்துள்ளார்.
