இனி பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான்.. முதல் நாளே விறுவிறுப்பைக் கூட்டும் எதிர்நீச்சல் சீரியல்..
வித்யாசமான கதைக்களத்தால் மக்களின் விருப்ப நாடகமாக இருந்த எதிர்நீச்சலின் 2ம் பாகம் இன்று முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

நக்கல், நையாண்டி, குரூரம், ஆணாதிக்கம், குடும்பத்தில் பெண்கள் படும் துயரம், அதிலிருந்து மீண்டு எழுதல் என பல காட்சி அமைப்புகள் மூலம் தமிழ் ரசிகர்களை இழுத்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆரம்பத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த சீரியல், நாட்கள் செல்ல செல்ல தன் கதையமைப்பினால், ரசிகர்களை தன் வசம் இழுத்தது.
ஆதி குணசேகரன்
அதிலும், ஆதி குணசேகரனாக நடித்து, வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் அப்லாஸ் வாங்கி இருப்பார் மாரி முத்து. இந்த சீரியலின் மையமே இவர்தான். இவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களும், இவரால் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும் தான் கதை என்றாலும், அதில் அவர் பேசும் வசனமும் அதன் உச்சரிப்பு மற்றும் முக பாவனையும் அனைவரையும் அசரடித்தது.
பின் இவர் சோசியல் மீடியா மீம் கன்டெண்ட் ஆன பின்பு இந்த சீரியலின் மவுசு கூடியது. பிறகென்ன, மாரிமுத்து இன்று என்ன சொல்லி நம்மை ரசிக்க வைக்கப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் மக்கள் சன் டிவி பக்கம் சென்றுவிடுவர். இந்த நாடகம் பீக்கில் சென்றுகொண்டிருந்த சமயத்திலேயே, அதுவும் இந்தச் சீரியலின் டப்பிங் வேலைகள் சென்று கொண்டிருக்கும் சமயத்திலேயே இவர் உயிரிழந்தார்.