12 - 14 வயது சிறார்களுக்கு மார்ச் 16 முதல் தடுப்பூசி
புதுடில்லி: நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடில்லி: நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இதனிடையே 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 16) முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மார்ச் 16 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.