தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nenjathai Killathe: மது குறித்து தெரிய வந்த உண்மை; மீண்டும் மோதலில் முடிந்த பேச்சுவார்த்தை; நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

Nenjathai Killathe: மது குறித்து தெரிய வந்த உண்மை; மீண்டும் மோதலில் முடிந்த பேச்சுவார்த்தை; நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 11, 2024 05:57 PM IST

Nenjathai Killathe: சந்தோஷ், மது நல்ல பொண்ணு தான் டா என்று சப்போர்ட் செய்து பேசுகிறான். அடுத்து மாயா தனது அம்மாவிடம் ஜீவா பற்றி பேசி கொண்டிருக்க, அதை பார்த்த கௌதம், இன்னும் பையன் கிட்ட பேசவே இல்லையே என்று சொல்லிய பொய்யை நினைத்து கவலைப்படுகிறான்- நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

Nenjathai Killathe: மது குறித்து தெரிய வந்த உண்மை; மீண்டும் மோதலில் முடிந்த பேச்சுவார்த்தை; நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்
Nenjathai Killathe: மது குறித்து தெரிய வந்த உண்மை; மீண்டும் மோதலில் முடிந்த பேச்சுவார்த்தை; நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

 

மாப்பிள்ளை ஓகேதான் 

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கௌதம் மாயாவிடம் மாப்பிளையை பார்த்து பேசிட்டேன்.. நல்ல பையனா தான் இருக்கான் என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஜீவா கௌதம் தனக்கும், மாயாவுக்கும் கல்யாணம் பேச வந்ததாக விஷயத்தை சொல்ல, உடனே அம்மா உன்னால், ஒரு நல்ல விஷயமாவது நடக்குதா என்று மதுவை பிடித்து திட்டுகிறாள். இதனால், மது என்னால் எதுவுமே நல்லதா நடக்கல என்று பீல் செய்ய, அப்பா அவளுக்கு ஆறுதல் சொல்கிறார். மறுபக்கம் ட்ரைவர் மது மேல எந்த தப்பும் இல்ல; என் மேல தான் தப்பு என்று சொன்னதும், கௌதம் பீல் செய்தான். 

சந்தோஷ், மது நல்ல பொண்ணு தான் டா என்று சப்போர்ட் செய்து பேசுகிறான். அடுத்து மாயா தனது அம்மாவிடம் ஜீவா பற்றி பேசி கொண்டிருக்க, அதை பார்த்த கௌதம், இன்னும் பையன் கிட்ட பேசவே இல்லையே என்று சொல்லிய பொய்யை நினைத்து கவலைப்படுகிறான். அடுத்து மது, ஜீவாவிடம் காதல் குறித்து கேட்க, நல்ல பொண்ணு தான், ஆனால் பிடிவாத குணம் ஜாஸ்தி என்று சொல்கிறான். 

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்து கௌதம், மீண்டும் மதுவிற்கு போன் செய்து கல்யாணம் குறித்து பேச முயற்சி செய்ய, இருவரும் மீண்டும் பழைய விஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால், இந்த முறையும் பேச்சு வார்த்தை மோதலில் முடிகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடந்தது என்ன? என்பதையும் பார்த்து விடலாம். 

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில், போலீஸ் பொருட்களை பறிமுதல் செய்து சென்றதால், பரிகாரத்தை அடுத்த நாள் தள்ளிவைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபாவிற்குள் புகுந்த சக்தி

அதாவது, அடுத்த நாள் காலையில் தீபாவும், ரம்யாவும் பரிகாரம் செய்ய உள்ள இடத்திற்கு வந்து சேர்க்கின்றனர். ரம்யா எல்லாம் ரெடியா என்று சைகையில் கேட்க, போலிச் சாமியாரும், கண்ணை காட்டுகிறான். பிறகு தீபாவை பேரருக்குள் இறங்க சொல்ல, திடீரென அவளுக்குள் ஒரு சக்தி இறங்குகிறது. இந்த நிலையில், அவள் ரம்யாவை இறங்க சொன்னாள். இதைக்கேட்ட ரம்யா அதிர்ச்சி அடைந்தாள்.

தொடர்ந்து தீபா, நீ இறங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி ரம்யாவை அதட்டி அலற வைக்கிறாள். கூடவே, சாமியாரை சூடம் காட்ட சொல்ல, அவரும் காட்ட, அந்த சூடத்தையும் தட்டி விட்டு விடுகிறாள். அது அந்த ஆளின் கொண்டையில் பட்டு தீ பிடிக்க ஆரம்பித்து விட்டது. இதையடுத்து அந்த ஆள் அலறியடித்து ஓடினான். தொடர்ந்து, ரம்யாவின் கழுத்தை பிடித்து உள்ளே இறக்கிய தீபா பேரரை மூடி போட்டு மூடி தள்ளி விடுகிறாள்.

சரியான நேரத்தில் வந்த கார்த்திக்

மறுபக்கம், தீபாவை தேடி வரும் கார்த்திக், ஒரு கட்டத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உருண்டு வரும் பேரரை பிடித்து திறந்து பார்க்க அதற்குள் ரம்யா இருக்கிறாள். கார்த்திக்கை பார்த்த ரம்யா, இவனுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதற, அவன் ஒரு கம்பெனியோட முதலாளி நீங்க இப்படி செய்யலாமா என்று கேட்கிறான். கார்த்திக் பேசுவதை வைத்து அவனுக்கு உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளும் ரம்யா, தீபாவுக்காக நான் தான் பரிகாரத்தை பண்ணேன் என்று சம்பவத்தையே மாற்றி விடுகிறாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: