Karthigai deepam: கைதாகும் ராஜேஸ்வரி? தீபாவின் காதல் குறித்து சிக்கிய ஆதாரம்! - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
ஒரு பக்கம் ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட, கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று ட்ராமா போடுகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்டு, கடைசியில் அது நடக்காமல் போனது. இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு பக்கம் ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட, கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று ட்ராமா போடுகிறாள்.
இந்த நிலையில் எடிட்டர் ரவி ராஜேஸ்வரி தான் தீபாவும் ரக்ஷனும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி நியூஸ் போட சொன்னது என்ற உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்கிறான்.