Karthigai Deepam: மையப்புள்ளியில் கார்த்திக் பல்லவி.. கோகிலா செய்த குளறுபடி! - கார்த்திக்கிடம் சிக்குவாரா தீபா?-zeetamil serial karthigai deepam episode latest update here - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மையப்புள்ளியில் கார்த்திக் பல்லவி.. கோகிலா செய்த குளறுபடி! - கார்த்திக்கிடம் சிக்குவாரா தீபா?

Karthigai Deepam: மையப்புள்ளியில் கார்த்திக் பல்லவி.. கோகிலா செய்த குளறுபடி! - கார்த்திக்கிடம் சிக்குவாரா தீபா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2024 02:42 PM IST

கார்த்திக்கு டிமிக்கி கொடுத்த கோகிலா.. உண்மையை மறைக்க ரூபஸ்ரீ போட்ட பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியல்!
கார்த்திகை தீபம் சீரியல்!

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா பல்லவியாக பாட முடிவெடுக்க, கார்த்திக் பல்லவியை கண்டுபிடிக்க கிளம்பிச் சென்றான். இந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

கோகிலா ரவுடிகளிடம் பாத்ரூம் போக வேண்டும் என அடம் பிடிக்க ஒரு கட்டத்தில் ரவுடிகளும் பாவம் பார்த்து, கயிற்றை அவிழ்த்து விடுகின்றனர்.  ஆனால் கோகிலா, அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிறார்.

ரூபஸ்ரீ வீட்டில் டென்ஷனாக உட்கார்ந்து இருக்க, அப்போது யாரோ கதவைத் தட்ட, கார்த்திதான் வந்திருக்கிறார் என்று கதவைத் திறக்கிறார். ஆனால் அங்கு கோகிலா நிற்பதை பார்த்து சந்தோஷமாகிறாள்.

பிறகு தீபாவுக்கு போன் போட்டு பாட போக வேண்டாம் என சொல்ல முயற்சி செய்ய, போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் ரூபஸ்ரீ தீபா பாடுவதில் நமக்கு பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் கார்த்திக்கு பல்லவி தீபா தான் என்ற உண்மை தெரியக்கூடாது என முடிவெடுக்கிறாள்.

உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு கார்த்திக் கண் பார்வையற்ற குழந்தைகள் ஆசிரமத்திற்கு போக விடாமல் தடுத்து நிறுத்த சொல்கிறாள். இதையடுத்து ரவுடிகள் கார்த்தியை பாலோ செய்ய மறுப்பக்கம் தீபா ஆசிரமத்திற்கு வந்து சேர்க்கிறாள்.

ஆசிரமத்தில் கார்த்திக் ஆர்டர் செய்த ஸ்பெஷலான உணவு வந்திருந்தாலும், பல்லவி பாட்டை கேட்காமல் சாப்பிட மாட்டோம் என குழந்தைகள் அடம்பிடித்துக் கொண்டே இருப்பதாக ஆசிரமத்தின் நிர்வாகிகள் சொல்கின்றனர். அங்கு வந்த தீபா முதலில் நீங்க எல்லாரும் சாப்பிடுங்க.. உங்களோட சேர்ந்து நானும் சாப்பிடுகிறேன் என சாப்பிட உட்காருகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.