தமிழ் இயக்குநர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் எங்கே சிக்கல்?-ஜீ 5 தலைமை அதிகாரி மனிஷ்கல்ரா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
தமிழ் இயக்குநர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்தும், ஜீ5 -யின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்தும் ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா சிறப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்
ஓடிடியின் வளர்ச்சிக்கு பிறகு, பிரபலமான நடிகர்களுக்கான வாய்ப்புகள் இரு மடங்கு அதிகமான அதே நேரத்தில், படைப்பில் வித்தியாசத்தன்மை, திரைக்கதையில் புதிய உத்திகள், உண்மைக்கு நெருக்கமான கதை களங்களை தேடுதல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு படைப்பாளர்கள் தள்ளப்பட்டனர்.
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் படைப்பாற்றல் மிகுந்த இயக்குநர்கள், திறமையான நடிகர்கள் அடையாளப்படுவதற்கு ஓடிடி தளங்கள் பெரும் உதவி செய்திருக்கின்றன. இப்படி திரைத்துறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஓடிடி தளங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? தற்போதைய வெப் சீரிஸ் தயாரிப்பில் படைப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஓடிடி தளங்கள் எதிர்பார்ப்பது என்ன? உள்ளிட்டவை குறித்து ஜீ 5 ஓடிடி தலைமை வணிக அதிகாரி மனிஷ் கல்ரா உடன் ஹிந்துஸ்தான் தமிழ் சார்பாக பிரத்யேகமாக உரையாடினேன். அந்த உரையாடலில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே!
ஜீ 5 வளர்ந்து வரும் மற்றும் பிரபலமான இயக்குநர்களிடம் எந்த மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறது?
ஜீ 5 வளர்ந்து வரும் மற்றும் வெற்றிப்பெற்ற இயக்குநர்களிடம் இருந்து தனித்துவம் மற்றும் உண்மைக்கு நெருக்கமான, அதே நேரத்தில், நம் நாட்டில் பரந்து பட்டு கிடக்கும் வேறுபட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் விதமான கதைகளை எதிர்பார்க்கிறது.
வெப் சீரிஸ் தயாரிப்பை பொருத்தவரை, கதை சொல்லலில் தேர்ந்த திறமை, படைப்பாற்றல் மற்றும் தயாரிப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வது உள்ளிட்டவற்றை படைப்பாளர்கள் வலுபடுத்த வேண்டும். கதை சொல்லலில் புதிய உத்தி, புதிய கதைக்களம் மற்றும் பார்வையாளர்களை எமோஷனலாக என்கேஜாக வைத்திருக்கும் விஷயங்களை ஜீ 5 அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இறுதியாக நல்ல கன்டென்டை கொடுப்பதே ஜீ 5 யின் அடிப்படையான நோக்கம் என்றாலும், ஜீ 5 க்கு மீண்டும் வரும் அளவிலான என்கேஜிங்கான கதைகளையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வெப்சீரிஸ் தயாரிப்பில், புதிதாக நடிக்க வரும் நடிகர்கள் அல்லது பிரபலமான நடிகர்களிடம் ஜீ 5 எதிர்பார்ப்பது என்ன?
ஜீ 5 -யை பொருத்தவரை, அது வளர்ந்து வரும் நடிகரோ அல்லது பிரபலமான நடிகரோ, இரண்டு தரப்பில் இருந்தும், பன்முகத்தில் அணுகும் முறை, நம்பகத்தன்மையை வெளிக்கொண்டு வருதல், முக்கியமாக, பார்வையாளர்களுடன் எமோஷனலாக கனெக்ட் ஆகும் திறன் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம். ஒரு நடிகராக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக பிரதிபலிக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
வெப்சீரிஸ் தயாரிப்பு என்று வரும் போது, விதிகளை சரியாக பின்பற்றுதல், குழுவுடன் இணைந்து இலகுவாக பணியாற்றும் திறன், தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன் உள்ளிட்டவை தேவைப்படுகிறது. நாங்கள் பல்வேறு மொழிகளில், வளரும் மற்றும் வளர்ந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி, அர்த்தமுள்ள கதைகளை எங்களின் பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறோம்.
கதையே கிங்
நாங்கள் ஒரு கதையை தேர்வு செய்வதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. எங்களின் அல்டிமேட் கோல், அர்த்தமுள்ள கதைகளைச் சொல்லி, மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்து இருக்கும் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதே; நாங்கள் இதற்கு முன்னரும் அதனை செயல்படுத்தி இருக்கிறோம். ஆம், ஜீ 5 ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய், பங்கஜ் திரிபாதி, நவாசுதீன் சித்திக், ரித்தீஷ் தேஷ்முக், சோனாக்ஷி உள்ளிட்ட பல திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. அதே போல தமிழ், தெலுங்கு, பங்களா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளக்கும் திறமையாளர்களுடனும் பணியாற்றி இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அண்மையில் ஜீ 5 தயாரித்த மனோரதங்கள் வெப் சீரிஸில் நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, ஃபகத் ஃபாசில், மோகன் லால், இயக்குநர் பா.ரஞ்சித், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னணி திறமையாளர்கள் பணியாற்றி இருந்தார்கள்.
ஒரு புராஜெக்ட்டில் மக்களுக்கு பரீச்சயமான முன்னணி திறமையாளர்கள் பங்கேற்கும் போது, பார்வையாளர்களின் அதிகபட்சமான கவனம் அந்த படைப்புக்கு கிடைக்கும். சிறந்த முறையில் கதை சொல்லுதல் மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பு ஆகிய இரண்டும் பார்வையாளர்களை ஈர்ப்பதில் மிக முக்கிய கவனம் பெறுகிறது. வளரும் நடிகரோ அல்லது வளர்ந்த நடிகரோ இரண்டு தரப்பிலும் இருந்தும், ஒரு நட்சத்திர நடிகர் கொடுக்கும் அர்ப்பணிப்பு மற்றும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திரையில் தத்ரூபமாக கொண்டு வருதல் ஆகிய இரண்டையும் ஜீ 5 எதிர்பார்க்கிறது. அத்துடன படைப்பு உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுதல் மற்றும் திரைக்கதையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிந்த அளவிலான உழைப்பைக்கொடுத்தல் உள்ளிட்டவையும் வெப் சீரிஸ் தயாரிப்பில் தேவைப்படுகிறது” என்று அவர் பேசினார்.
முழு பேட்டி விரைவில்..
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்