வெப் சீரிஸ் எடுக்க ஸ்கிரிப்ட் இருக்கா?.. இயக்குநர், நடிகர்களிடம் ஜீ 5 எதிர்பார்ப்பது என்ன? - ஜீ 5 மனிஷ் கல்ரா பேட்டி
வெப் சீரிஸ் எடுக்க உங்களிடம் ஸ்கிரிப்ட் இருக்கிறதா? உங்களுக்கு வாய்ப்பு வழங்க ஜீ 5 சில வரைமுறைகளை வைத்திருக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து ஜீ 5 தலைமை வணிக அதிகாரி மனிஷ் கல்ரா சிறப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்

ஓடிடியின் வளர்ச்சிக்கு பிறகு, பிரபலமான நடிகர்களுக்கான வாய்ப்புகள் இரு மடங்கு அதிகமான போதும், படைப்பில் வித்தியாசத்தன்மை, திரைக்கதையில் புதிய உத்திகள், உண்மைக்கு நெருக்கமான கதை களங்களை தேடுதல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு படைப்பாளர்கள் தள்ளப்பட்டனர். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் படைப்பாற்றல் மிகுந்த இயக்குநர்கள், திறமையான நடிகர்கள் அடையாளப்படுவதற்கு ஓடிடி தளங்கள் உதவிக்கரம் நீட்டின.
இப்படி திரைத்துறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஓடிடி தளங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? தற்போதைய வெப் சீரிஸ் தயாரிப்பில் படைப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஓடிடி தளங்கள் எதிர்பார்ப்பது என்ன? எந்த மாதிரியான கதைகளுக்கு நல்ல ரீச் கிடைக்கிறது உள்ளிட்டவை குறித்து ஜீ 5 ஓடிடி தலைமை வணிக அதிகாரி மனிஷ் கல்ரா உடன் ஹிந்துஸ்தான் தமிழ் சார்பாக பிரத்யேகமாக உரையாடினேன். அந்த உரையாடலில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே

