தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tv Tamil Serial Karthigai Deepam Latest Today Episode Update

Karthigai deepam: ஸ்கெட்சை மாற்றிய ஐஸ்வர்யா; காணாமல் போன எடிட்டர்; கலங்கி நிற்கும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Mar 12, 2024 02:28 PM IST

கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, நீ மாட்டிக்க போற மா என்று எச்சரிக்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு என்று சொல்லி போனை வைக்கிறாள்

கார்த்திகை தீபம் சீரியல்!
கார்த்திகை தீபம் சீரியல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி, வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, நீ மாட்டிக்க போற மா என்று எச்சரிக்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு என்று சொல்லி போனை வைக்கிறாள்.

கார்த்திக் வீட்டிற்கு வந்து நியூஸ் எடிட்டர் வந்து உண்மையை சொல்லுவான் என்று காத்திருக்க நேரம் ஆகி கொண்டே போகிறது, நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிக்க போறேனு சொன்ன, இப்போ ஒருத்தனையும் காணவில்லை என்று வம்பிழுக்கிறாள். யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு என்று கார்த்திக்கை எச்சரிக்கிறாள்.

இதையடுத்து கார்த்திக் நியூஸ் எடிட்டர் கண்டிப்பா வருவாரு எனக்கு 5 மணி வரைக்கும் டைம் கொடுங்க என்று சொல்லி விட்டு நேராக ரவி வீட்டிற்கு கிளம்பி வர, அவரது மனைவி அவர் காலையிலேயே கிளம்பிட்டாரே அண்ணா, இன்னும் வரலையா என்று கேட்கிறாள். கார்த்திக் எதையும் சொல்லாமல் நான் பார்த்துக்கறேன் என்று சமாளித்து வெளியே வருகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரவியை கண்டுபிடித்து கார்த்திக் எப்படி உண்மையை உடைக்க போகிறான் என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்று நடந்தது என்ன? 

தீபாவை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக்கு எல்லோரிடமும் தர்ம லிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்ததைச் சொல்கிறான். இதுக்கு காரணம் நம்ம வீடும் தான் என்றும் சொல்ல, எல்லோரும் குழப்பம் அடைகின்றனர்.

மேற்கொண்டு பேசிய கார்த்திக், ராஜேஸ்வரிதான் பேப்பரில் தீபா பற்றிய தவறான செய்தியை போட சொன்னது என்று சொன்னது மட்டுமல்லாமல், அவங்கதான் சீர்வரிசை கேட்டு தர்மலிங்க மாமாவ அவமானப்படுத்தினாங்க, அதனால்தான் அவர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் சீர் செய்துள்ளார் என்ற உண்மையை உடைக்கிறான்.

இதையெல்லாம் கேட்ட ராஜேஸ்வரி, அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் என கேட்டதோடு, எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க ..ஆதாரம் இல்லாம பேசாதீங்க என்று சாடினாள். இதைக்கேட்ட கார்த்திக், செய்தி போடச் சொன்னது நீங்க தானே நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறான்.

இதையடுத்து கார்த்திக் என்ன செய்யப் போறான் என ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா குழப்பத்தில் இருக்க, கார்த்திக் நியூ எடிட்டர் ரவி வீட்டுக்கு வருகிறான். அங்கு வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி, நீங்க வந்து உண்மையை சொல்லணும் என்று கூப்பிட, ரவி எனக்கு எதுவும் பிரச்சனை வராதா என்று பயப்படுகிறான்.

ரவியின் மனைவி நீங்க செய்த தவற நீங்கதான் சரி செய்யணும் ஒரு பெண்ணோட வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று அட்வைஸ் செய்ய, அவர் உண்மையைச் சொல்ல ஒப்புக்கொள்கிறான். மறுபக்கம், வீட்டில் என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் எல்லோரும் காத்திருந்தனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்