Karthigai Deepam: தீபா செய்த உதவி..! கார்த்திக்கு தெரிய வரும் உண்மை - இன்றையை கார்த்திகை தீபம் எபிசோடில்
தீபா செய்த உதவியால், கார்த்தியிடம் சவுண்ட எஞ்சினியர் உண்மையை உடைக்கும் திருப்பத்துடன் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலாக கார்த்திகை தீபம் இருந்து வருகிறது. இந்த தொடரின் ஜனவர் 10 (நேற்று) எபிசோடில் கார்த்திக், பல்லவி ஏமாற்றிய விஷயத்தை சொல்ல அனைவரையும் அதிர்ச்சி படுத்தியது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்
கார்த்திக், இளையராஜா ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது பல்லவி போனில் இருந்த அழைப்பு வர, கார்த்திக் போனை எடுக்காமல் தவிர்கிறான். ஆனாலும் தீபா மீண்டும் மீண்டும் கால் செய்ய வேறு வழியின்றி கார்த்திக் போனை எடுக்கிறார்.
அப்போது, பல்லவி உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்கிறார் என சொல்ல, கார்த்திக்கோ இன்னும் பேச என்ன இருக்கிறது என்கிறார். பல்லவி மன்னிப்பு கேட்க, நான் எதிரியை கூட மன்னிப்பேன், நம்பிக்கை துரோகியை மன்னிக்க மாட்டேன் என கார்த்திக் பதில் கூறுவதுடன், நம்பிக்கை துரோகிகளை என் பக்கத்தில் கூட வைச்சிக்க மாட்டேன் என்று போனை கட் செய்ய தீபா வருத்தமடைகிறாள்.
அடுத்து தீபா வெளியே நடந்து சொல்ல, அப்போது அவள் எதிரே நடந்து வந்த குழந்தை மற்றும் குழந்தையின் தாய் மீது கார் மோதுகிறது. தீபா இருவரையும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள். தீபாவுக்கு லேசான காயம் ஏற்படுகிறது.
பின் விபத்தில் சிக்கிய பெண் தனது கணவருக்கு போன் செய்து விபத்து ஏற்பட்ட விவரத்தையும், குழந்தைக்கு அடிபட்டதையும் கூறி அவரை மருத்துவமனை வர சொல்கிறார்.
மருத்துவமனை வரும் பெண்ணின் கணவர் தீபாவை பார்த்து, பல்லவி என நினைத்து குழப்பம் அடைகிறார். அந்த நபர் சிதம்பரம் ஆபிஸில் சவுண்ட எஞ்சினியராக வேலை செய்கிறார்.
பல்லவி தனது குடும்பத்துக்கு செய்த உதவிக்காக, அவர் சிதம்பரம் வற்புறுத்தி தான் என்ற உண்மையை கார்த்தியிடம் சொல்ல முடிவெடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ன என்பதை அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் காணுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9