Nenjathai Killathe: ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’; கெளதம் கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் மது! - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்!
Nenjathai killathe: கௌதம் மதுமிதாவுக்கு போன் செய்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறான். இதைக்கேட்ட மது அதிர்ச்சி அடைகிறாள். பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாகவே இருந்து விடுகிறாள். - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்!
மீடியாவில் பரவிய தகவல்.. கல்யாணம் குறித்து கௌதம் கேட்ட கேள்வி, மதுமிதாவின் முடிவு என்ன? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்!
மீடியா பரப்பிய தவறான தகவல்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், கௌதம், மோதிரத்தை எடுத்துக் கொடுத்த நிலையில், மீடியா மதுவுக்கு கௌதம் ப்ரபோஸ் செய்வதாக நினைத்து போட்டோ எடுத்து விடுகிறது. இதனையடுத்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, வீட்டுக்கு வந்த மதுமிதாவிடம் அவளது அம்மா ரேணுகா என்னாச்சு என்று கேட்டாள். அதற்கு, மதுமிதா அமைதியாகவே இருக்க, அவர் மதுவை திட்டி விடுகிறாள். இதைத்தொடர்ந்து ஜீவா, மதுமிதாவை சமாதானம் செய்கிறான். மறுபக்கம் சந்தோஷ், கௌதமிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, செய்தியில் கௌதம் மதுமிதாவிற்கு ப்ரபோஸ் செய்ததாக தவறான தகவல் பரவியதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.