தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nenjathai Killathe: ‘தங்கை வீடு தேடி வந்த கௌதம்..மோதலில் முடித்து விட்ட மதுமிதா' - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

Nenjathai Killathe: ‘தங்கை வீடு தேடி வந்த கௌதம்..மோதலில் முடித்து விட்ட மதுமிதா' - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 10, 2024 04:33 PM IST

Nenjathai Killathe: தங்கைக்காக வீடு தேடி வந்த கௌதம்.. மோதலில் முடித்து விட்ட மதுமிதா - நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

Nenjathai Killathe: ‘தங்கை வீடு தேடி வந்த கௌதம்..மோதலில் முடித்து விட்ட மதுமிதா' - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்
Nenjathai Killathe: ‘தங்கை வீடு தேடி வந்த கௌதம்..மோதலில் முடித்து விட்ட மதுமிதா' - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்

 

ஒர்க் ஆகாத லிப்ட்.. கலாய்த்த மதுமிதா

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கௌதம் மதுமிதாவின் தோள் மீது கை வைத்து, எக்ஸ் கியூஸ் மீ என்று லிப்ட்டுக்கு வழி கேட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

அதாவது, லிப்ட் ஒர்க் ஆகாத நிலையில், கௌதம் அப்போ நான் இந்த வழியா நடந்துதான் மேலே போகணுமா என்று கேட்க, மதுமிதா உங்களால் முடியும்னா நீங்க பறந்து கூட போகலாம் என்று கலாய்க்கிறாள். இதையடுத்து கௌதம் கஷ்டப்பட்டு படியேற மதுமிதா, வயசானவங்க பையை வாங்கிட்டு ஏறலாம்ல என்று சொல்ல, கௌதம் அந்த பெண்ணின் பையை வாங்கி கொண்டு ஏறி செல்கிறார்.

கௌதம் கஷ்டப்பட்டு ஏறுவதை மதுமிதா கலாய்த்தபடியே பின்தொடர்ந்து செல்கிறாள். நான்காது மாடியை அடைந்ததும் மூச்சு வாங்க தொடங்க, மதுமிதா இங்க தான் எங்க வீடு.. இருங்க தண்ணீர் கொண்டு வரேன் என்று உள்ளே செல்ல, அதற்குள் இவன் டிரைவருக்கு போன் செய்து மாத்திரை கொண்டு வர சொல்கிறான்.

ட்ரெண்டிங் செய்திகள்

என்னுடைய தப்புதான்

மாத்திரையுடன் வந்த ட்ரைவரை பார்த்த மதுமிதா, இது கௌதம் என்பதை புரிந்து கொண்டு ஆக்சிடெண்ட் விஷயமாக பேச வந்ததாக நினைத்து, அவனை திட்ட, இவன் ஜீவாவை பற்றி பேச இருவருக்கும் மோதல் உருவாகிறது. இதனை தொடர்ந்து, இந்த வீட்டிற்கு வந்தது என்னுடைய தப்பு தான் என்று திரும்பி வந்து விடுகிறான்.

அடுத்து மாயா ஜீவாவுக்கு போன் செய்து என் அண்ணன் உங்க வீட்டில் பேச போய் இருக்காரு என்று விஷயத்தை சொல்ல கௌதம் சந்தோஷ்க்கு போன் செய்து இந்த குடும்பமே பிராடு குடும்பம்.. இது நமக்கு செட்டாகாது என்று சொல்கிறான்.

வெடித்த மோதல்

பிறகு வீட்டிற்கு வந்த கௌதமிடம், மாயா ஜீவா வீட்டில் போய் பேசிட்டிங்களா? என்று கேட்க, அவன் அந்த குடும்பம் நமக்கு செட்டாகாது என்று சொல்ல, மாயா கோபப்படுகிறாள். உடனே கௌதம் பையனை பார்த்து பேசிட்டேன். எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லி சமாளிக்கிறான்.

மறுபக்கம், வீட்டிற்கு வந்த ஜீவா, கௌதம் வந்ததை பற்றி சொல்ல எல்லாரும் உண்மை அறிந்து ஷாக் ஆகுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.