Karthigai deepam: கம்பி எண்ண செல்லும் ரம்யா.. காதல் வலையில் கார்த்திக்.. குஷியில் தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: அடுத்து ரம்யா தீபா போல் மாஸ்க் அணிந்து கொண்டு, மணமேடை ஏறி, கார்த்திக் கையால் தாலி கட்டி கொள்ள திட்டமிட்டு இருந்தாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: கார்த்திக், தீபாவின் கல்யாணத்தில் நடிக்க போவது? வெல்ல போவது ரம்யாவா? தீபாவா? கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
ஸ்பெஷல் எபிசோட் எப்படி அமைந்து இருந்தது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திக் தீபாவின் திருமணத்தை நோக்கி இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1:30 மணி முதல் இரண்டரை மணி நேர ஸ்பெஷல் எபிசோடாக இந்த கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திக், தீபாவின் திருமண வைபோகமாக இந்த ஸ்பெஷல் எபிசோட் அமைந்து இருந்தது.
ஏற்கனவே ரம்யா தனது அப்பாவுக்கு விஷத்தை கொடுத்த நிலையில், அடுத்து ரம்யா தீபா போல் மாஸ்க் அணிந்து கொண்டு, மணமேடை ஏறி, கார்த்திக் கையால் தாலி கட்டி கொள்ள திட்டமிட்டு இருந்தாள். இன்னொரு பக்கம் ரூபாஸ்ரீ கோகிலா ஐஸ்வர்யாவுடன் சேர்ந்துகொண்டு ஐந்து கொலை ஆறுமுகம் என்பவனை ஏற்பாடு செய்து, தீபாவை கடத்த திட்டமிடுகிறார்கள்.
கம்பி எண்ண செல்லும் ரம்யா!
இதற்கிடையே, அபிராமியின் தொழியாக, நடிகை அம்பிகா சிறப்பு விருந்தினராக கார்த்திக்- தீபா கல்யாணத்திற்கு வருகை தந்தார். இந்த நிலையில், தீபா நன்றாக பாடுவாள் என்பதை அறிந்து, அவளை பாட சொல்ல, தீபாவும் பாட்டு பாடி அனைவரையும் கவர்ந்தாள்.
ஏற்கனவே கார்த்திக்கு, ரம்யாவின் மீது சந்தேகம் இருந்து வரும் நிலையில், ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்திக்கு போன் செய்து, ரம்யா குறித்த மொத்த உண்மையும் உடைந்து விட்டார். இதனையடுத்து கார்த்திக் ரம்யாவின் முகத்திரையை கிழித்து அவளை போலீசில் ஒப்படைத்தான்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
மீனாட்சி கரண்ட் ஷாக் அடிப்பது போல நடி; கார்த்திக் உனக்கு முதலுதவி தருவதற்காக முத்தம் கொடுப்பான் என்று ஐடியா கொடுத்தாள். இதையடுத்து தீபாவும் கார்த்திக் ரூமுக்குள் சென்று துணியை அயர்ன் செய்வது போல ஆக்சன் செய்தாள். தொடர்ந்து கரண்ட் ஷாக் அடிப்பது போல மயங்கி விழுந்தாள். ஆனால் தீபாவின் நடிப்பை புரிந்து கொண்ட கார்த்திக், அவளை கண்டு கொள்ளாமல் ரூமை விட்டு வெளியே வந்து விட்டான். வெளியே வந்தும் தீபா மயங்கி கிடப்பது போலவே நடிக்க, கார்த்திக் தண்ணீர் அடித்து சென்று தெளித்து, அவளை எழுப்பி உங்களோட பிளான் எனக்கு புரிஞ்சு போச்சு என்று சொன்னான்.
தீபாவும், உங்களை காதலை சொல்ல வைக்கத்தான் இப்படி முயற்சி செய்தேன் என்று சொல்லி பல்பு வாங்கினாள். அடுத்து ரூபஸ்ரீ அஞ்சு கொலை ஆறுமுகத்தை கூப்பிட்டு, இவ தான் தீபா இவளை போட்டு தள்ளனும் என்று தீபாவை கை காட்ட, அந்த சமயம் பார்த்து ரம்யா அங்கு வந்து நிற்க, ரவுடி ரம்யாவை தான் கொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்