Karthigai Deepam: தாத்தாவை பார்க்க வந்த கார்த்திக்.. மயில்வாகனத்துக்கு தெரிந்த உண்மை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
Karthigai Deepam Today Episode: உடல்நிலை சரியில்லாத தாத்தாவை பார்க்க வந்த கார்த்திக் குறித்த உண்மை மயில் வாகனத்துக்கு தெரிய வருகிறது. இப்படியான பரபரப்பு காட்சிகள் நிறைந்திருக்கும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி, தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க கிளம்புவது போல் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ராஜா சேதுபதி உடல்நிலை சரியில்லாமல் இருக்க டாக்டர் அவரை பரிசோதனை செய்கிறார். பின்னர் பயப்படுற மாதிரி எதுவும் இல்லை, மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என சொல்லி விட்டு செல்கிறார்.
கார்த்திக் குறித்த உண்மை அறியும் மயில் வாகனம்
இதையடுத்து கார்த்திக் வந்திருக்கும் தகவல் அறிந்து விருமன் உட்பட எல்லோரும் வீட்டு முன்பு கூடி விடுகின்றனர். ராஜராஜன்னு ஒருத்தன கூட்டிட்டு வரேன், கோவில் திருவிழாவை நடத்துறேன்னு சவால் விட்டயே என்ன ஆச்சு எங்க என்று கேட்கிறான் விருமன்.
கார்த்திக் கண்டிப்பாக கூட்டிட்டு வரேன் அதுக்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டிருக்கிறேன். இப்போ தாத்தா உடம்பு முடியாம இருக்காரு என்று சொல்லி பேச, ஊர்காரர்கள் கார்த்திக்கு ஆதரவாக பேசுகின்றனர். மயில் வாகனம் இதையெல்லாம் பார்த்துவிட கார்த்திக் குறித்த உண்மையை அறிகிறான்.
உண்மையை உடைக்கும் கார்த்திக்
பிறகு கார்த்தியிடம் யாருடா நீ என்று கேட்கிறான். அப்போது ராஜராஜன் என்னுடைய மாமா தான், நான் ராஜா சேதுபதியோட பேரன் என்ற விஷயத்தை உடைக்கிறான். நீ அந்த வீட்டோட மருமகன். அப்படி இருக்கும் போது நீ எதுக்கு டிரைவராக நடிச்சுக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்க, இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க தான் என்ற விஷயத்தை சொல்கிறான்.
பிறகு மயில்வாகனத்திடம் என்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் அந்த வீட்ல சொல்லக்கூடாது என பேசி கார்த்திக் அங்கிருந்து கிளம்புகிறான். வீட்டுக்கு சென்றதும் எங்க போயிருந்தீங்க என்று மற்றவர்கள் விசாரிக்க, பக்கத்தில் ஒரு விஷயமாக சென்று இருந்ததாக பொய் சொல்லி சமாளிக்கிறான்.
இந்த நேரத்தில் சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோட்
"கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டில், கம்பி கிழித்து விட்டதாக பொய் சொல்லி சமாளித்து விடுகிறான். அடுத்ததாக, கார்த்திக் மகேஷ் வீட்டுக்கு வந்து பார்க்க, அங்கு வீட்டில் யாரும் இல்லை. அதன் பிறகு ரேவதிக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் மாயா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாக சொல்ல, அதிர்ச்சியுடன் ரேவதி ஹாஸ்பிடல் கிளம்பி செல்கிறாள்.
ஹாஸ்பிடலில் மாயா தற்கொலைக்கு முயன்றதாக சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு மாயாவிடம் விசாரிக்க என்னையும் என் கொழுந்தனையும் சேர்த்து வச்சு தப்பா பேசுறாங்க. அத என்னால ஏத்துக்க முடியல. அதனாலதான் இப்படி பண்ணியதாக டிராமா போடுகிறாள்.
மாயா திட்டம் போட்டு தான் இப்படி செய்திருக்கிறாள். இப்போ எதுவும் சொல்ல முடியாது என மாயா, மகேஷ் கள்ளத்தொடர்பு குறித்த உண்மையை சொல்லாமல் கார்த்திக் அமைதியாகி விடுகிறான். இதைத்தொடர்ந்து கார்த்திக்கு தாத்தா ராஜா சேதுபதியிடம் இருந்து போன் கால் வருகிறது. உடனே கார்த்திக் மற்றும் மயில் வாகனம் என இருவரும் கிளம்பி ராஜா சேதுபதியை சந்திக்கச் செல்கின்றனர்"
கார்த்திகை தீபம் சீசன் 2
ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக அமைந்திருந்த கார்த்திகை தீபம் சீரியல் கடந்த 2022 முதல் ஒளிபரப்பான நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபம் சீசன் 2 முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் கார்த்திக் ராஜ் தான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகியாக வைஷ்ணவி சதீஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி, விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்