Karthigai Deepam: ‘கத்திக்குத்து வாங்கிய மயில்வாகனம்.. அலேக்காக ஓடிய மாயா.. என்ன ஆனது? ’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: மகேஷின் முகத்திரையை கிழித்து அவனை பிடிக்கிறான். இந்த சூழலில் மாயா மயில் வாகனத்தை கத்தியால் குத்தி விட்டு, இருவரும் சேர்ந்து தப்பிக்கின்றனர். கார்த்திக் அவர்களை பிடிக்க முயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது. - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மாயா சாமுண்டீஸ்வரியிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
குழப்பம் உருவாகிறது.
அதாவது, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் மாயாவை வர சொன்ன இடத்திற்கு வந்து விடுகின்றனர். கார்த்திக் தூரத்தில் மறைந்திருக்க, மயில் வாகனம் முகத்தை மறைத்தபடி நிற்கிறான். அதே போல் மாயா மற்றும் மகேஷ் என இருவரும் முகத்தை மறைத்தபடி வருகின்றனர். இருவருக்கும் எதிரில் இருப்பது யார் என்ற குழப்பம் உருவாகிறது.
குத்துவாங்கிய மயில்வாகனம்.
மாயா பணத்தை கொடுக்க, மயில் வாகனம் அதை வாங்கிக்கொண்டு மகேஷின் முகத்திரையை கிழித்து அவனை பிடிக்கிறான். இந்த சூழலில் மாயா மயில் வாகனத்தை கத்தியால் குத்தி விட்டு, இருவரும் சேர்ந்து தப்பிக்கின்றனர். கார்த்திக் அவர்களை பிடிக்க முயற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
மயில் வாகனம் கத்தி குத்துடன் விழ, கார்த்திக் அவனை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான். குடும்பத்தாரிடம், கம்பிக்குத்தி காயம் ஏற்பட்டதாக சொல்லி சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கார்த்திக் மயில்வாகனத்திடம், மாயா தப்பானவள் என்பது தெரிந்து விட்டது; ஆனால், மகேஷூம் தப்பானவனாக இருந்தால் மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம், இல்லன்னா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று கூறினான்.
மறுபக்கம் ரேவதி, ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும், இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என்னுடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறேன். அதுவரைக்கும் கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கோங்க என்று சொல்லி விடை பெற்றாள்.
கொழுந்தனின் கர்ப்பம்
இங்கே கார்த்திக் மயில்வாகனத்தின் இன்னொரு ரகசிய நம்பரில் இருந்து மாயாவுக்கு போன் போட்டு உன்னை பற்றிய உண்மை தெரிந்து விட்டது என சொல்லி மிரட்டச் சொன்னான். அவன் சொன்ன படியே, மயில்வாகனம் மாயாவுக்கு போன் போட்டு, நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும்.. கொழுந்தன் கூட ஜாலியா இருந்து கர்ப்பம் ஆகிட்டு, இப்போ கர்ப்பத்தை கலைத்து விட்டாயா? டாக்டர் மல்லிகாவை தெரியுமா என்று கேட்க, மாயா அதிர்ச்சி அடைந்து, போனை கட் செய்து விட்டாள்.
மீண்டும் போன் செய்யும் மயில்வாகனம், ஒரு லட்ச ரூபா பணத்தை கொடுத்தால், விஷயத்தை யாரிடம் சொல்லாமல் இருப்பேன் என்று மிரட்ட மாயா ஃபோனை வைத்தாள். பிறகு மகேஷிடம் சொல்லி பணத்தை கொடுத்து இந்த விஷயத்தை முடிக்க முடிவெடுத்தாள்.
2 லட்சம் கேட்ட மாயா
மகேஷ் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்க, மாயா ரேவதியை சந்தித்து கல்யாண செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சொல்லி, இரண்டு லட்சம் ரூபாய் கேட்டாள். உடனே ரேவதி, மாயாவை அழைத்துச் சென்று சாமுண்டீஸ்வரி முன்னாடி நிறுத்தி இவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்த கொடுங்க என்று கூறினாள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்