Karthigai Deepam: அபிராமி குறித்து கிடைத்த தகவல்..சீறி பாய்ந்த கார்த்திக்.. கொலை செய்ய திட்ட போடும் ஐஸ்வர்யா!-zee tamil serial karthigai deepam serial today episode updates - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அபிராமி குறித்து கிடைத்த தகவல்..சீறி பாய்ந்த கார்த்திக்.. கொலை செய்ய திட்ட போடும் ஐஸ்வர்யா!

Karthigai Deepam: அபிராமி குறித்து கிடைத்த தகவல்..சீறி பாய்ந்த கார்த்திக்.. கொலை செய்ய திட்ட போடும் ஐஸ்வர்யா!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 30, 2024 12:53 PM IST

அபிராமி குறித்து வந்த தகவல்.. காஞ்சிபுரம் கிளம்பும் கார்த்தி, ஐஸ்வர்யா செய்த ஏற்பாடு - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

மீனாட்சி, ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரியின் முகத்தை மூடி அடி வெளுத்தெடுத்து அனுப்பினாள். இதனையடுத்து அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி, தீபாவும் மைதிலியும் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு என்று கூறினாள். இதற்கு ஐஸ்வர்யா, அவங்க ஏன் அப்படி பண்ணனும் என்று கேட்கிறாள். 

மீனாட்சிக்கு இன்னும் கோபம் அடங்காமல் இருக்க, தனியாக சிக்கிய ரியாவையும் போட்டு வெளுத்தெடுக்கிறாள். இதை பார்க்கும் தீபா, மீனாட்சியை கூட்டி சென்று விடுகிறாள். 

மறுபக்கம் அபிராமி கோயிலை சுத்தம் செய்து கொண்டிருக்க, அதை பார்த்து பூசாரி உங்களுக்கு என்னமா பிரச்சனை சொல்லுங்க… தீர்த்து வைக்க முயற்சி செய்யுறேன் என்று சொல்கிறார். ஆனால் அபிராமி நீங்க தங்க இடம் கொடுத்ததே போதும் என்று சொல்கிறார்.

பிறகு ஐஸ்வர்யாவும், ரியாவும் ரவுடி ஒருவனுக்கு பணத்தை கொடுத்து, நாங்க சொல்லும் போது அபிராமி கதையை முடிச்சிடு என்று சொல்கின்றனர். எதுக்கு வெய்ட் பண்ணனும் கோயிலில் வைத்தே கொன்னுடுறேனன் என்று ரவுடி சொல்ல, ஐஸ்வர்யா கோயிலில் வைத்து பண்ணா பெரிய பிரச்சினையாகும் என்று சொல்லி விடுகிறாள்.

தீபா அபிராமிக்காக வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு செல்வதாக கார்த்தியிடம் சொல்ல, அவன் அம்மா மனசு வருத்தத்தில் இருந்தா ஒரு கோயிலுக்கு போவாங்க, அந்த கோயில் தெரியுமா என்று கேட்க, தீபா தெரியாமல் முழிக்க, அவள் மீனாட்சியிடம் கேட்க அவளும் தெரியாமல் முழிக்கிறாள். பிறகு தீபா, மீனாட்சி மைதிலி ஆகியோர் கோயிலுக்கு கிளம்பி வருகின்றனர். தீபா அங்கப்ரசாதனம் செய்து கொண்டிருக்கிறாள்.

அபிராமியை கோயிலில் பார்க்கும் துப்புரவு பணியாளர் ராணிக்கு தகவல் கொடுக்க, ராணி கார்த்திக்கு தகவல் கொடுக்கிறாள். அவன் உடனடியாக கோயிலுக்கு கிளம்பிச் செல்கிறான்; அதே போல் கோயிலில் மீனாட்சியை பார்த்த உறவுக்கார பெண் ஒருவரும் அபிராமியை காஞ்சிபுரம் கோயிலில் பார்த்ததாக சொல்ல, இவர்களும் காஞ்சிபுரத்துக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

அபிராமி தூரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்து அங்கு படுத்தாள். ஐயர் கோயிலை மூட போகும் சமயத்தில் அபிராமியை பார்த்து யாரு நீங்க? கோயிலை மூடனும் என்று கூற, அபிராமி வீட்டில் ஒரு பிரச்சினை அதனால் இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கிறேன் என்று அனுமதி கேட்க, அய்யரும் சம்மதம் சொன்னார். 

மறுபக்கம் ஐஸ்வர்யா ரியாவை சந்தித்து நீ எங்க கூட கூட்டு சேர்ந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்குத் தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா, ஒரு கோயிலுக்கு போவாங்க, இப்பவும் அங்கே இருக்க தான் வாய்ப்பு இருக்கு, அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிடலாம் என்றனர். 

அதன் பின்னர் மீனாட்சியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு, இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வரலாம் என்று சொல்ல, ரியா பயந்து நடுங்குகினாள்

ஆனாலும், ஐஸ்வர்யா அவளது மண்டையை கழுவி கூட்டு சேர்த்தாள். மறுபக்கம் ஆனந்த், நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிருக்க, எனக்கு நல்லாவே தெரியும் என கார்த்தியிடம் சண்டையிட்டான். அபிராமியோ கோயிலில் திருப்பணி செய்து மன நிம்மதியை தேடினாள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.