Karthigai deepam: தீபா கழுத்தில் கார்த்திக் தாலி..ரியாவிற்கு ஆனந்த் கொடுத்த ஏமாற்றம்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
தீபா கழுத்தில் தாலி கட்டிய கார்த்திக்.. ஆனந்தால் காத்திருந்த ஏமாற்றம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
நேற்றைய எபிசோடில் ஆனந்த் மீனாட்சி கழுத்தில் தாலி கட்ட தடுமாற அபிராமி சத்தம் போட்டதும், அவன் தாலி கட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை கட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து, தீபா காலில் போட்டு விட சொல்ல, கார்த்தியும் போட்டு விடுகிறான். அப்படியே மறுபக்கம் ரியா ஆனந்துக்காக கோயிலில் காத்துக் கொண்டிருக்கிறாள்.