Karthigai Deepam: கார்த்தியிடம் சிக்கிய கருத்தடை மாத்திரை.. மாட்டிக்கொண்டாரா மாயா? - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்தியிடம் சிக்கிய கருத்தடை மாத்திரை.. மாட்டிக்கொண்டாரா மாயா? - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: கார்த்தியிடம் சிக்கிய கருத்தடை மாத்திரை.. மாட்டிக்கொண்டாரா மாயா? - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2025 12:49 PM IST

Karthigai Deepam: ரேவதி ஒரு ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தையை பார்க்கிறாள். அந்த குழந்தை ரேவதியை பார்த்ததும் அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்று சொல்லி, கட்டியணைத்து அன்பை பரிமாறுகிறது. -கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: கார்த்தியிடம் சிக்கிய கருத்தடை மாத்திரை.. மாட்டிக்கொண்டாரா மாயா? - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: கார்த்தியிடம் சிக்கிய கருத்தடை மாத்திரை.. மாட்டிக்கொண்டாரா மாயா? - கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்; இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக் கையில் எரிந்து போன போட்டோ கிடைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மாயா மீது சந்தேகம்.

போட்டோவானது, மாயாவின் போட்டோ என அறியும் கார்த்திக், மாயா மீது மேலும் சந்தேகம் கொள்கிறான். மறுபக்கம் மாயா மகேஷிடம் கருத்தடை மாத்திரைகள் தீர்ந்து விட்டது. ஒழுங்காக ரேவதியை கல்யாணம் பண்ற வேலைய பாரு என எச்சரிக்கிறாள்.

அடுத்ததாக கார்த்திக், மாயா வீட்டிற்கு வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வீடு முழுவதும் நோட்டமிட, கார்த்தி கையில் ஒரு மாத்திரை ஸ்ட்ரிப் சிக்குகிறது. அதனை அவன் மருந்துக்கடைக்கு கொண்டு சென்று விசாரிக்கும் போது, அது கருத்தடை மாத்திரை அட்டை என தெரிய வருகிறது.

இந்தப்பக்கம் மாயா, ரேவதிக்கு போன் செய்து கிளம்பி செல்கிறாள். இதற்கிடையே, கார்த்திக்கிற்கு மாயாவை ஒரு முறை ஹாஸ்பிடலில் பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனால் அப்போது மாயா தலைவலி காரணமாக ஹாஸ்பிடலுக்கு வந்ததாக சொன்னதையும் கார்த்தி நினைத்து பார்க்கிறான்.

கட்டியணைத்து அன்பை

மற்றொரு பக்கம், ரேவதி ஒரு ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தையை பார்க்கிறாள். அந்த குழந்தை ரேவதியை பார்த்ததும் அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்று சொல்லி, கட்டியணைத்து அன்பை பரிமாறுகிறது. அந்தக்குழந்தையிடம், இன்னும் பத்து பதினைந்து நாட்களில் உன்னை என் கூடவே கூட்டிச் சென்று விடுகிறேன் என்று வாக்கு கொடுக்கிறாள்.

தொடர்ந்து குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தூங்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

போட்டோவை வாங்கச் செல்வதற்கு முன்பாக இன்விடேஷனை தேர்வு செய்ய சென்றனர். ரேவதிக்கு எந்த டிசைன் தேர்வு செய்வது என்ற குழப்பம் உருவாக கார்த்தியை தேர்வு செய்யச் சொன்னாள். கார்த்தி ஒரு டிசைனை தேர்வு செய்து கொடுத்தான்.

அடுத்ததாக நிச்சயதார்த்த போட்டோவை வாங்கச் சென்றனர். அப்போது அந்த போட்டோவில் மாயா பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து கார்த்திக் ஷாக் ஆனான்; டாக்டரின் மகள் சொன்ன விஷயத்தை நினைத்து பார்த்தான் .

ரேவதி போட்டோவுடன் நேராக மகேஷ் வீட்டிற்கு சென்றாள். அப்போது மாயா நிச்சயதார்த்த போட்டோவில் பிங்க் கலர் புடவையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ரேவதி கிளம்பியதும் மகேஷிடம், கார்த்தி மட்டும் அந்த போட்டோவை பார்த்தா நான் மாட்டிக்கொள்வேன் என்று கூறினாள்.

இங்கே ரேவதி வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரியிடம் நிச்சயதார்த்த போட்டோவை காட்டுகிறாள். அந்த சமயத்தில் மாயா வீட்டிற்கு வருகிறாள். சாமுண்டேஸ்வரி என்ன மாயா திடீரென வந்து இருக்கீங்க என்று கேட்க, ஸ்வீட் செய்தேன், உங்களுக்கும் கொண்டு வந்தேன் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைந்தாள்.

பிறகு ரேவதியிடம் அந்த நிச்சயதார்த்த போட்டோவை கொஞ்சம் கொடுமா பார்த்துட்டு தரேன் என்று கேட்டு வாங்கினாள். தொடர்ந்து, ரேவதியிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டு அவளை திசை திருப்பி தனது போட்டோக்களை மட்டும் எடுத்து மறைத்தாள். வெளியே வந்த அவள் எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டோவை வீசி விட்டு நிம்மதியுடன் சென்றாள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.