Karthigai Deepam:கார்த்திக்கிற்கு கேழ்வரகு களி;தீபாவிற்கு கழுத்தில் தாலி!
கார்த்திகை தீபம் சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட் இங்கே
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு ( ஏப்ரல் 19) அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் இந்த ஸ்பெஷல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பதை இங்கு பார்க்கலாம். கார்த்தி மற்றும் தீபா ஆகிய இருவரும் தனியாக பெங்களூர் செல்ல மீனாட்சி நேற்று தீட்டிய திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதனால் இருவரும் பெங்களூர் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க முயற்சி செய்த ஐஸ்வர்யாவை மீனாட்சி பாத்ரூமில் வைத்து பூட்டி விடுகிறாள். பிறகு சிறிது நேரம் கழித்து ஐஸ்வர்யா பாத்ரூம் கதவை தட்டிக் கொண்டிருக்க மீனாட்சி திறந்து விடுகிறாள்.
கார்த்தி மற்றும் தீபா என இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது பாட்டி ஒருவர் வழியில் லிஃப்ட் கேட்கிறார். அவர் ஏற்கனவே சந்தித்த பாட்டி என தெரிய வருகிறது.
அந்த பாட்டிமா இவர்களைப் பார்த்து நீங்கள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா என கேட்கிறார். பிறகு கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் கார்த்திக்கின் நண்பனின் வீட்டில் தங்க, அப்பொழுது கார்த்திக் பசிக்கிறது என சொல்கிறான். உடனே தீபா அவனுக்காக அவன் ஆசைப்பட்ட கேழ்வரகு களியை செய்து கொடுக்கிறாள்.
பிறகு கார்த்தி அபிராமி சொன்ன விஷயத்தை நிறைவேற்றுவதற்காக கோயிலுக்கு சென்று குளத்தில் தாலியை போட்டு விடுகிறான். அப்போது அந்த குளத்தில் மூழ்கி எந்திருக்கும் தீபாவின் கழுத்தில் அந்த தாலி மாட்டிக்கொள்கிறது. தீபா தாலியை கழட்ட முயன்றும் அவளால் முடியாமல் போக மனசாட்சி தோன்றி ஏன் உன்னால் தாலியை கழட்ட முடியவில்லை என கேள்வி கேட்கிறது.
இன்னொருபுறம் நட்சத்திரா துரைக்கு போன் போட்டு கார்த்தி மற்றும் தீபா என இருவரும் பூஜை செய்வதற்காக துர்கை அம்மன் கோயிலுக்கு தான் சென்றிருக்கிறார்கள். அவர்களை கோயிலில் தேடுங்கள், கண்டிப்பாக கிடைப்பார்கள் என சொல்கிறாள். துரையும் அதற்கேற்றார் போல கார்த்தி மற்றும் தீபா இருக்கும் கோயிலை தேடி பிடித்து வருகிறான்.
மறுபக்கம் அபிராமி பூஜை செய்து கொண்டிருக்க, பூஜை முடிந்ததும் சாமி நல்லது நடக்கும் என உத்தரவு கொடுப்பது போல பூ கீழே விழுகிறது. அதைப் பார்த்து அவள் சந்தோஷப்படுகிறாள். அடுத்து கார்த்திக்கும், துரையின் ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. அதன் பிறகு தீபா, கார்த்திக் என இருவருக்கும் இடையே ரொமான்ஸ் பாடல், நடனம் என இந்த ஸ்பெஷல் எபிசோடே கலைகட்ட உள்ளதாம்.கார்த்திகை தீபம் ஸ்பெஷல் எபிசோடை வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.