தீபாவை கடத்த ரூபஸ்ரீயின் திட்டம்..சக்தியால் ஏற்பட்ட ட்விஸ்ட், ஷாக்கில் அபிராமி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தீபாவை கடத்த ரூபஸ்ரீ போட்ட திட்டம், சக்தியால் காத்திருந்த ட்விஸ்ட், ஷாக்கிங்கில் அபிராமி குடும்பம் என கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை வேனில் கச்சேரிக்கு அழைத்து செல்ல ஷக்தி முடிவெடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
போலி கார்த்திக்கை அழைத்து வரும் ரூபாஸ்ரீ
அதாவது, ரூபாஸ்ரீ ஒருவனை ஏற்பாடு செய்து கார்த்திக் போல் நடித்து ஆசிரமத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து தீபாவை கடத்த திட்டமிடுகிறாள். அவனும் ஆசிரமத்துக்கு வந்து கார்த்திக் போல் நடித்து எல்லாரையும் நம்ப வைக்க முயற்சி செய்கிறான். அப்போது அவன் ஓவர் ஆக்டிங் செய்ய ரூபஸ்ரீ பதறுகிறாள்.
இருந்தாலும் அவன் கார்த்திக் போல் நடித்து அனைவரையும் நம்ப வைத்தாலும், இறுதி நொடியில் அங்கு வரும் ஷக்தி இது கார்த்திக் இல்லை என்பதை கண்டுபிடிக்க ரூபஸ்ரீ அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள், பிறகு ஆசிரமத்தில் இருந்து கச்சேரிக்கு கிளம்ப தயாராகுகின்றனர்.