தீபாவை நெருங்கும் ரூபஸ்ரீ..இழப்பின் துயரத்தில் கார்த்திக்! நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தீபாவை நெருங்கும் ரூபஸ்ரீ, இழப்பின் துயரத்தில் கார்த்திக் இருக்க கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம். தீபாவை கச்சேரியில் பாட விடாமல் துங்கா போடு திட்டம், தீபாவை சந்திக்க ரூபஸ்ரீ முயற்சிப்பது என பரபர காட்சிகள் இடம்பெறவுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை வேனில் வைத்து கச்சேரி நடக்கும் இடத்துக்கு அழைத்து செல்ல ஆசிரமத்தில் இருப்பவர்கள் முடிவெடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துங்கா போடும் திட்டம்
அதாவது, ஆசிரமத்தில் இருப்பவர்கள் தீபாவை வேனில் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்ய இன்னொரு பக்கம் துங்கா தீபா எப்படியும் கச்சேரிக்கு வருவா, அவளை எப்படியாவது கடத்தி இந்த கச்சேரியில் பாட விடாமல் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறான்.
மறுபக்கம் கார்த்திக் வீட்டில் தர்மலிங்கம் இறந்த சோகத்தில் இருக்க அவனுக்கு ஆறுதல் சொல்லும் அபிராமி இந்த கச்சேரி நல்லபடியாக நடக்கணும் தீபா கச்சேரிக்கு வரணும் என்று கடவுளிடம் வேண்டுகிறாள்.