Karthigai Deepam: ‘அலேக்காக தூக்கிய கார்த்திக்.. முட்டிக்கொண்ட ரேவதி.. கடுப்பான மாயா - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: கார்த்திக் போட்டியில் நான் கலந்துக்கலாமா என்று கேட்டு ரேவதியை அலேக்காக தூக்கி வெளியே கொண்டு வர இருவரும் மோதி கீழே விழுகின்றனர். இதை பார்த்து மகேஷ், மாயா கடுப்பாகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதிக்கு ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டது. இந்த நிலையில், கார்த்திக் முதலுதவி கொடுத்து காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஆதங்கத்தை சொல்கிறாள்.
அதாவது, பரமேஸ்வரி பாட்டி, முருகனை கூப்பிட்டு பேர பிள்ளைகளுக்கு ஆசைப்பட்ட மாதிரி துணி எடுத்து கொடுத்துட்டேன். என் பிள்ளைக்கும் மருமகளுக்கும் எடுத்து கொடுக்கணும்னு ஆசைப்படுறேன் என்று ஆதங்கத்தை சொல்கிறாள்.
முருகன் அதுக்கு எதுக்கு பாட்டி என்னை கூப்பிடுற.. மாறுவேஷத்தில் போ என்று சொல்ல, பாட்டி எப்படி முருகா கண்டுபிடிச்சிட்டா பிரச்னையாகிடும் என்று பயப்படுகிறாள். முருகன் நிச்சயத்துக்கு நான் சொன்ன மாதிரி போனியே மாட்டிகிட்டியா? அதே மாதிரி இப்போவும் மாட்டிக்க மாட்ட என்று சொல்ல, பரமேஸ்வரி பாடி ஒரு சாமியார் வேஷத்தில் ரெடியாக முருகன் சூப்பர் பாட்டி என்று சொல்லி மறைகிறான்.
கோலத்திற்கு நடுவில்
அடுத்து இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராக, ரேவதி வெளியில் பெரிய ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள்; கோலத்தை முடித்து விட்டு பார்த்தால், கோலத்திற்கு நடுவில் இருக்கிறாள். இதையடுத்து, கோலம் கலையாமல் வெளியே வர முயற்சி செய்கிறாள்.
வீட்டில் உள்ளவர்கள் கோலம் கலைந்தால் பரவாயில்லை என்று சொல்லியும், ரேவதி வர மறுக்கிறாள். இந்த சமயத்தில் மகேஷ், மாயா வீட்டிற்கு வர சாமுண்டீஸ்வரி கோலம் கலையாமல் ரேவதியை வெளியே அழைத்து வர சொல்கிறாள். ரேவதியை வெளியே அழைத்து வர முடிவு செய்யும் மகேஷ் கீழே விழுந்து விடுகிறான்.
இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி ரேவதியை கோலம் கலையாமல் வெளியே கொண்டு வருபவருக்கு 10,000 ரூபாய் பரிசு என்று சொல்கிறாள். கார்த்திக் போட்டியில் நான் கலந்துக்கலாமா என்று கேட்டு ரேவதியை அலேக்காக தூக்கி வெளியே கொண்டு வர இருவரும் மோதி கீழே விழுகின்றனர். இதை பார்த்து மகேஷ், மாயா கடுப்பாகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்