Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிய ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிய ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிய ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2025 01:48 PM IST

Karthigai Deepam Update: கரண்ட் ஷாக் வைக்கும் மயில் வாகனம் திட்டத்தில் எதிர்பாராமல் மட்டிக்கொள்கிறார் ரேவதி. இதில் கார்த்திக் மீது பழி விழுந்த நிலையில் அடுத்த நடக்கப்போவது என்ன என்பது இன்றைய எபிசோட் காட்சிகளாக இடம்பெறவுள்ளன.

 மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிய ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிய ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

கரண்ட் ஷாக்கில் சிக்கிக்கொள்ளும் ரேவதி

மயில் வாகனம் எல்லாவற்றையும் ரெடி செய்து வைத்து விட்டு ரோகிணிக்கு ஷாக் அடித்தால் காப்பாற்றலாம் என காத்துக் கொண்டிருக்க, எதிர்பாராத திருப்பமாக அதில் ரேவதி சிக்கி கொள்கிறாள். அவளுக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்படுகிறாள். மாயா, மகேஷ் என எல்லாரும் இருக்கும் போதே ரேவதிக்கு முதலுதவி கொடுக்கும் கார்த்திக் அவளை காப்பாற்றுகிறான்.

ஒயர் வெளியே கிடப்பதை பார்த்த சந்திரகலா, கார்த்திக் வேண்டும் என்றே திட்டம் போட்டு தான் இப்படி செய்ததாக பழி சொல்கிறாள். ஆனால் மயில்வாகனம் நான் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி கோபப்படுகிறாள்.

கார்த்தியிடம் மன்னிப்பு கேட்கும் மயில் வாகனம்

ரோகிணியோட என்னை சேரவும் விடவும் மாட்ரீங்க, அவளும் என்னை நெருங்க விட மாட்டுறா அதனால் தான் இப்படி செய்ததாக சொல்ல, கார்த்திக் இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைக்க சொல்லி ஐடியா கொடுக்கிறான்.

மயில் வாகனம் சந்தோஷப்படுகிறான். தொடர்ந்து கார்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

பரமேஸ்வரி பாட்டி கார்த்திக்கு போன் செய்து, பேத்திகளுக்கு பொங்கலுக்கு துணி எடுத்து கொடுக்கணும் என ஆசையை சொல்ல, கார்த்திக் சரி எடுத்து கொடுங்க என சொல்கிறான். பிறகு பாட்டி துணிகளை கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் வாங்கி கொள்கிறான்.

ஏற்கனவே சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் எல்லோருக்கும் துணி எடுத்துட்டு வர சொல்லி இருந்த நிலையில், கார்த்திக் பரமேஸ்வரி பாட்டி கொடுத்த துணிகளை மாற்றி கொடுத்து விடுகிறான்.

அதன் பிறகு மயில் வாகனம் ரோகிணியிடம் எப்படி சேர்ந்துவிடவேண்டும் என யோசித்து கரண்ட் ஷாக் வைத்து ரோகிணியை காப்பாற்றுவது போல் காப்பாற்றினால், அப்படி இப்படி ரொமான்ஸ் நடக்கும் அதை வைத்துகாப்பாற்றி விடலாம் என பிளான் போடுகிறான். இதன் தொடர்ச்சியாக இந்த பிளானில் ரேவதி சிக்கி கொள்ள, அதன் பிறகு மயில் வாகனம் - ரோகிணி ஆகியோருக்கு ஹனிமூன் பிளான் நடக்க என செல்ல இருக்கிறது இன்றைய எபிசோட்.

கார்த்திகை தீபம் சீசன் 2

ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக அமைந்திருந்த கார்த்திகை தீபம் சீரியல் கடந்த 2022 முதல் ஒளிபரப்பான நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபம் சீசன் 2 முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் கார்த்திக் ராஜ் தான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகியாக வைஷ்ணவி சதீஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி, விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.