Karthigai Deepam: ஐஸ்வர்யாவை நடுங்க வைத்த லெட்டர், அபிராமி கிட்னிக்கு நடக்கும் டீலிங் - விறுவிறு கார்த்திகை தீபம்!
கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கன சொல்லலையே என்று சொல்ல, நீ சொல்றத பார்த்தா எங்களை சொல்ற மாதிரி தான் இருக்கு, ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடியிடம் இருந்து தப்பி வந்த அபிராமி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அபிராமியை தேடி போன இடத்தில கார்த்திக்கிற்கு ஒரு கடிதம் கிடைக்கிறது, அதில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையால் வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொண்டேன் என்று எழுதி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்கிறான்.
நம்ம வீட்டு பிரச்சனை நமக்கு மட்டும் தான் தெரியும், இந்த லெட்டரை வைத்து பார்க்கும் போது, நம்ம குடும்பத்தில் இருக்க யாரோ ஒருவர் தான் அம்மாவை கடத்தி இருக்கணும் என்று சொல்ல, ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் பதறுகின்றனர்.
