தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deepam Latest Today Update

Karthigai deepam: கார்த்திக்கு ஆபத்து; புலம்பி தவிக்கும் அபிராமி; நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 21, 2024 01:38 PM IST

கார்த்திக்கு கிடைத்த பாராட்டு, புலம்பி தவிக்கும் அபிராமி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோயிலுக்கு சென்றிருந்த போது, அங்கு தீபாவை பார்க்க கூடிய கூட்டத்தில் அபிராமி சிக்கிக்கொண்டார். 

அந்த கூட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட, தீபா மீது அந்த கோபத்தை காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அபிராமியும் தீபாவும் வீட்டிற்கு வர, அபிராமி கையில் இருக்கும் காயத்தை பார்த்து அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க, அவள் நடந்த விஷயத்தை சொல்கிறாள்.

பிறகு ரூமுக்கு வந்து கார்த்திக் போட்டோவை எடுத்து பார்த்து கொண்டிருக்க, அந்த போட்டோ கீழே விழுந்து உடைந்தது. இதையடுத்து அபிராமி ஜோசியர் சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து பயப்படுகிறாள். 

இதையடுத்து கார்த்திக் ஆபிஸ் வர அங்கு எல்லோரும் கை தட்டி வாழ்த்து சொல்கின்றனர். இதனையடுத்து கார்த்தியும்.. நீங்கள் செய்ததும் பெரிய உதவி என்று பாராட்டி நன்றி தெரிவிக்கிறான்.

பிறகு சினேகாவை பார்த்து… என்ன சினேகா கச்சேரிக்கு நீங்க வரவே இல்லை என்று கேட்க, இல்ல சார் கொஞ்சம் பர்சனல் வேலை இருந்ததாக சொன்னதும்தான் மிச்சம்.. கார்த்திக் மேலேயும் கீழேயும் பார்க்கிறான். 

உடனே சினேகா… உண்மையாகவே கொஞ்சம் வேலை இருந்தது சார். அதனால் தான் வர முடியல. எனக்கும் கச்சேரிக்கு வரணும் என்ற ஆசை இருந்தது என்று சொல்கிறாள்.

அடுத்து இளையராஜா கார்த்திக்கிடம், தீபா பாட கூடாதுனு எவ்வளவு தடை, எவ்வளவு எதிரிகள் என்று பேச வீட்லயே ஐஸ்வர்யா அண்ணி எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். 

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க, கோயிலில் அபிராமி கீழே விழுந்ததையும் தன்னை திட்டிய கதையையும் சொல்கிறாள். கார்த்திக் சரி ஃப்ரீயா விடுங்க, நான் பார்த்துக்கறேன் என்று ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து கொண்டு அபிராமியை பார்க்க வருகிறான்.

இங்கே அபிராமி அருணாச்சலத்திடம் ஜோசியர் சொன்ன விஷயங்களையும், தனக்கும் இருக்கும் பயத்தையும் சொல்லிக்கொண்டிருக்க, கார்த்திக் இதை கேட்டு விடுகிறான். பிறகு கார்த்திக் ரூமுக்குள் வர, இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர். 

தொடர்ந்து கார்த்திக் அபிராமிக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்