Karthigai deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: அபிராமியை காப்பாற்ற தீபாவுக்கு கிடைத்த வழி.. திட்டம் போட்டு சூனியம் வைத்து கொண்ட ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: சாமியார் கொடுத்த சாபம்.. விஷத்தால் நெஞ்செரிச்சல்.. கதறி துடித்த ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரம்யா பேரரில் உருட்டி விடப்பட, கார்த்திக் அவளை காப்பாற்றிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தீபாவை நம்ப வைத்த ரம்யா
அதாவது, கார்த்திக், ரம்யாவுடன் தீபா இருக்கும் இடத்திற்கு வர அங்கு தீபா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அவளை எழுப்ப, தீபா எனக்கு என்னாச்சு, இங்க என்ன நடந்தது? என்று கேட்டாள். கார்த்திக், உனக்கு ரம்யா பரிகாரம் செய்ததாக சொல்ல, தீபா ரம்யாவிடம், நீ எதுக்கு எனக்கு பரிகாரம் செய்தாய் என்று கோபப்படுகிறாள். பிறகு நீ தான் என்ன பண்ண சொன்ன என்று சொல்லி, தீபாவை ரம்யா நம்ப வைக்கிறாள்.
