Karthigai deepam: டாட்டூவால் சிக்கிய ரம்யா.. கார்த்திக் வைத்த ட்விஸ்ட்.. - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: கார்த்தியிடம் மோதிரத்தை கொடுக்க, அவளது கையில் இருக்கும் டாட்டூவை அவன் பார்த்தான். இதையடுத்து மீனாட்சி அனுப்பிய போட்டோவிலும் இதே டாட்டூ இருப்பது கார்த்திக்கு ஞாபகம் வருகிறது. -கார்த்திகை தீபம் அப்டேட்

டாட்டூவை வைத்து சிக்கிய ரம்யா.. சைலண்ட்டாக கார்த்திக் வைத்த செக்மேட் - ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியலின் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோடு அப்டேட்டை இங்கு பார்க்கலாம்.
தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் யாரோ ஒருவர் ஒரு லெட்டரை கொடுத்தார்.
அதனை வாங்கிய கார்த்திக், அதனை போலீசில் ஒப்படைத்தான். அப்போது அந்த லெட்டர், மேஜிக் பேனாவால் எழுதப்பட்ட லெட்டர் என்பது தெரியவந்தது. பரபரப்பான அந்த கட்டத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபம் சீரியலில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்ட கார்த்திக்
அதாவது, கார்த்திக் ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்டு, அவளை பார்க்க வந்த போது, ஐஸ்வர்யா மற்றும் ரியா இருவரும் சேர்ந்து தீபாவுக்கு நடக்கும் விஷயங்கள் பற்றி, ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கார்த்திக் சர்வர் ஒருவரை கூப்பிட்டு, ரகசியமாக ஏதோ பேசி, அவனிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறான்.
அதனை வாங்கிய அந்த சர்வர், ஐஸ்வர்யாவிடம் அந்த பேப்பரோடு, பேனாவையும் கொடுத்து, ஹோட்டல் குறித்தான ரேட்டிங்கை கொடுக்குமாறு சொல்கிறான். அதைக்கேட்ட ஐஸ்வர்யாவும் எழுதிக் கொடுக்க, சர்வர் என்ன மேடம் எதுவுமே இல்ல என்று கேட்டான். அதற்கு ஐஸ்வர்யா நான்தான் எழுதினேனே என்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.
மேஜிக் பேனா செய்த மாயம்
பிறகு அந்த சர்வர் சாரி மேடம், நான் தான் மேஜிக் பேனாவை கொடுத்து இருக்கேன் என்று சொன்னதும், ஐஸ்வர்யா அதை ஆச்சரியமாக வாங்கி பார்க்க, கார்த்தி அந்த லெட்டரை கொடுத்தது ஐஸ்வர்யா இல்லை என்பதை உறுதி செய்தான். பிறகு வீட்டுக்கு வர, தீபா கை வலியில் தவித்துக்கொண்டிருந்தாள் இதையடுத்து கார்த்திக் அவளுக்கு கையை பிடித்து விடுகிறான்.
அடுத்த நாள் ஆபீஸ் வரும் ரம்யா, கார்த்தியிடம் மோதிரத்தை கொடுக்க, அவளது கையில் இருக்கும் டாட்டூவை அவன் பார்த்தான். இதையடுத்து மீனாட்சி அனுப்பிய போட்டோவிலும் இதே டேட்டூ இருப்பது கார்த்திக்கு ஞாபகம் வருகிறது. இதனால் வீட்டுக்கு வந்த கார்த்திக், தீபாவிடம் உங்க ஃப்ரண்டை வர சொல்லுங்க, ஒருநாள் நேரில் பார்க்கலாம் என்று சொல்கிறான்.
அதனை தொடர்ந்து தீபாவும் ரம்யாவை வர சொல்கிறாள். கார்த்திக் வர சொன்னதாக ரம்யாவிற்கு தெரிய வந்ததும்,அவள் அதிர்ச்சி அடைகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்