Karthigai Deepam: மொத்த சொத்தும் அவனுக்கா? - அதிர்ச்சி வைத்த கொடுத்த அபிராமி; அரண்டு போன குடும்பம்! - கார்த்திகை தீபம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மொத்த சொத்தும் அவனுக்கா? - அதிர்ச்சி வைத்த கொடுத்த அபிராமி; அரண்டு போன குடும்பம்! - கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: மொத்த சொத்தும் அவனுக்கா? - அதிர்ச்சி வைத்த கொடுத்த அபிராமி; அரண்டு போன குடும்பம்! - கார்த்திகை தீபம்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 13, 2024 11:35 AM IST

பிராமி லாயரை வரவைத்து பேசிய விஷயத்தை சொல்ல ஐஸ்வர்யா, ஆனந்த் ஆகியோர் வீடு வேண்டும் என்று கேட்கின்றனர். கார்த்திக்கோ, அம்மா என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தான், ஆனால் அம்மாவும் அப்பாவும் என்கூட இருக்கணும் என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம் சீரியல்!
கார்த்திகை தீபம் சீரியல்!

அதாவது, அபிராமி லாயரை வீட்டிற்கு வர வைத்து, அவரையும் அருணாச்சலத்தையும் தனியாக அழைத்துச்சென்று, ஏதோ ஒரு விஷயத்தை சொல்கிறாள். இதைக்கேட்ட அருணாச்சலம் அதிர்ச்சி அடைகிறார். இது மட்டும் நம்ம புள்ளைங்களுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் என்று சொல்லி அதிர்கிறார்.

பிறகு அபிராமி லாயரை வரவைத்து பேசிய விஷயத்தை சொல்ல ஐஸ்வர்யா, ஆனந்த் ஆகியோர் வீடு வேண்டும் என்று கேட்கின்றனர். கார்த்திக்கோ, அம்மா என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தான், ஆனால் அம்மாவும் அப்பாவும் என்கூட இருக்கணும் என்று சொல்கிறான்.

மறுநாள் லாயர் வந்து டாக்குமென்டுகளை கொடுக்க, அபிராமியும் அருணாச்சலமும் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். லாயரோ, சொத்துக்கள் அனைத்தும் கார்த்தி பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

ஆனந்த், என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்க, நான் உனக்கு ஒரு பொண்ணை கட்டி வச்சா நீ இன்னொருத்தியை கல்யாணம் பன்னிட்டு வந்து நிற்கிறாய். நீ அவ பேச்சை கேட்டுட்டு, சொத்துக்களை அவ பேருக்கு மாத்தி எழுத மாட்டேன்னு என்ன நிச்சயம் என்று பதிலடி கொடுக்கிறாள்.

அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா, அப்போ எங்களுக்கு ஏன் எழுதி வைக்கல என்று கேட்க, அருணுக்கு இன்னும் பொறுப்பு வரல, அதை நான் ரிசார்ட் விஷயத்திலேயே பார்த்துட்டேன். நீ என்னை கொல்ல பிளான் போட்டது, தீபாவை வெளியே துரத்த பிளான் போட்டது என எல்லாமே எனக்குத் தெரியும். அருண் எப்போ சுயமா சிந்தித்து பொறுப்பா இருக்கானோ, அப்போ எனக்கு சொத்தை கொடுக்க தெரியும் என்று பதிலடி கொடுக்கிறாள்.

உடனே ஆனந்த் நான், அப்பா, அருண் என மூணு பேரும் மில்லுல இரவும் பகலுமா உழைத்த காரணத்தினால்தான் கார்த்தி வெளிநாட்டுல படிச்சு ஏசில உட்கார்ந்து வேலை பார்க்க முடியுது. ஒரு மாசம் அவனை மில்லுல வேலை பார்க்க சொல்லுங்க பார்க்கலாம் என்று சொல்ல, கார்த்திக் சவாலை ஏற்று கொள்கிறான். 

நீ சொல்ற மாதிரி நான் வேலை பார்க்குறேன்; ஆனால் அதுக்கப்புறம் சொத்தை பிரிக்கிறது பத்தி பேசவே கூடாது என்று செக்மேட் வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.