தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘திடீரென்று அணைந்த தீபா ஏற்றிய தீபம்.. கலக்கத்தில் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘திடீரென்று அணைந்த தீபா ஏற்றிய தீபம்.. கலக்கத்தில் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jun 12, 2024 03:56 PM IST

Karthigai Deepam: ரம்யாவின் மனசாட்சி அவள் முன் தோன்றி, நீ இந்த ஃபங்ஷனுக்கு போகலனா அம்மு, ரம்யா ரெண்டு பேரும் ஒருத்தர் தான் என்ற உண்மை கார்த்திக்கு தெரிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘திடீரென்று அணைந்த தீபா ஏற்றிய தீபம்.. கலக்கத்தில் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: ‘திடீரென்று அணைந்த தீபா ஏற்றிய தீபம்.. கலக்கத்தில் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ரம்யாவை புலம்ப விட்ட கார்த்திக், தீபா.. கோயிலில் காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே!

வாக்கு கொடுத்த ரம்யா!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின், நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் அருண், ஆனந்தை சந்தித்து, அம்மா அப்பாவின் அறுபதாம் கல்யாணம் பற்றி பேசினர். தொடர்ந்து, ரம்யாவையும் வீட்டுக்கு அழைத்தனர். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரம்யாவின் மனசாட்சி அவள் முன் தோன்றி, நீ இந்த ஃபங்ஷனுக்கு போகலனா அம்மு, ரம்யா ரெண்டு பேரும் ஒருத்தர் தான் என்ற உண்மை கார்த்திக்கு தெரிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, ரம்யாவை அழைத்த தீபா போன் செய்து நாளைக்கு கல்யாண நாள் கண்டிப்பா வரணும் என்று கூப்பிடுகிறாள். மேலும் நீ வரலனா நானும், கார்த்தியும் சேர்ந்து வந்து உன்னை கூட்டிக்கொண்டு வருவோம் என்று அன்பு மழை பொழிகிறாள். இதனையடுத்து ரம்யா, தீபாவிடம் நிச்சயமாக  வருவதாக வாக்கு கொடுக்கிறாள்.

கார்த்திக் பாத்துக்குவான்

இதையடுத்து தீபா, மீனாட்சி முன்னதாக கழட்டி வைத்த தாலியை எடுத்து கோயிலில் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டு என்று கூறி, கார்த்தியையும் அழைத்து செல்கிறாள். மறுபக்கம் அபிராமி வருத்தமாக உட்கார்ந்து இருக்கிறாள். இதைப்பார்த்த அருணாச்சலம் அபிராமியிடம், என்னாச்சு என்று கேட்க, ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் மீனாட்சி இந்த வீட்டில் இருந்தாலும், ஆனந்த் உடன் சேர்ந்து வாழாமல் இருக்கிறாள். ஃபங்ஷன்ல இந்த விஷயம் தெரிஞ்சா, எல்லோரும் என்ன சொல்லுவாங்க என்று வருத்தப்பட்டு புலம்பினாள். இந்த நிலையில் அபிராமியை ஆறுதல் படுத்திய அருணாச்சலம், கார்த்திக் இருக்கான்ல, அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான் என்று கூறுகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

கோயிலில் தீபா

இதைத் தொடர்ந்து தீபா கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு கற்பூர ஆரத்தியை தொட்டு கும்பிடும் போது, கற்பூரம் அணைந்து விடுகிறது. இந்த நிலையில் இது ஏதோ அபசகுணமாக தெரிகிறதேஎன்று  பதற, கார்த்தியோ காற்றில் அணைந்திருக்கும் என்று சொல்லி ஆறுதல் சொன்னான். ஆனால், தீபா நகர்ந்து வந்ததும், கடவுளிடம் தீபாவ சமாதானம் செய்யத்தான் அப்படி சொன்னேன். பங்க்ஷன்ல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக் கொள்கிறான்.

அடுத்ததாக ஒரு பெரிய மண்டபத்தில் 60-ம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகிறது. அபிராமி ஒரு பக்கம் கவலையில் இருக்க, கார்த்திக் இன்னொருபுறம் உஷாராய் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத் தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: