Karthigai Deepam: கார்த்திக்கிற்கு காய் நகர்த்தும் ரம்யா.. கைமாறிய புடவை.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா? கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியும், மீனாட்சியும் ரம்யா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ரம்யா ரூமில் மீனாட்சி
அதாவது, மீனாட்சி ரம்யா ரூமுக்குள் செல்ல, அங்கு ஆங்கரில் ஒரு சட்டை தொங்குவதை பார்த்து, இது அவரோட சட்டையா? உன் காதல் கதையை தீபா சொல்லி இருக்கா என்று கலாய்க்கிறாள். அதன் பிறகு, ரம்யா இவர்களுக்கு தெரியாமல் கோயிலில் இருந்து வாங்கி வந்த புடவையை எடுத்து விடுகிறாள். அந்த புடவை இருக்கும் பையிலேயே மீனாட்சியின் பர்ஸ்சும் சிக்கி கொள்கிறது.
இதனை தொடர்ந்து அபிராமியும், மீனாட்சியும் புடவையை மறந்து கிளம்பி விடுகின்றனர். கார்த்திக் கோயிலில் தீபாவுக்காக பதிலாக பரிகார பூஜையை முடித்து விட்டு வருகிறான். அப்போது தன்னுடைய மோதிரத்தை கழட்டி கொடுத்தவரை பார்க்க நேருகிறது. அவரோ, மோதிரத்தை ரம்யா திரும்பி வாங்கிட்டாங்க. அதன் பிறகு பணத்தை கொடுத்தாங்க என்று சொல்ல, கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து மோதிரத்தை கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டான்.